இரட்டைக் குதிரையில் சவாரி செய்து மூக்கு உடைந்த 7 நடிகர்கள்.. பலத்த அடி வாங்கிய கமல்!

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளையும் கட்டுரைகளையும் கண்டு வருகிறோம் அந்த வகையில் இந்த பதிவில் நாம் காணவிருப்பது தமிழ் சினிமாவில் இருந்து கொண்டே அரசியலிலும் கால்பதித்து இரட்டைக் குதிரையில் சவாரி செய்த நடிகர்களை பற்றி.

டி ராஜேந்தர்: இந்த வரிசையில் முதலிடம் பிடிப்பவர் பல்கலை வித்தகர் டி ராஜேந்தர் அவர்கள். சினிமாவில் எல்லா துறைகளிலும் தனது திறமையை காட்டிய டி ராஜேந்தர் அவர்கள் அரசியலிலும் ஆரம்ப காலம் தொட்டே இருந்து வருகிறார். முதலில் திமுகவில் தொடங்கிய இவரது அரசியல் பங்களிப்பு பின்னர் அதில் இருந்து வெளியேறிய பிறகு தாயக மறுமலர்ச்சி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். பின்னர் வைகோவின் வெளியேற்றத்திற்கு அப்புறம் மீண்டும் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 2004ஆம் ஆண்டு மீண்டும் திமுகவில் இருந்து வெளியேறிய அவர் தனது சொந்தக் கட்சியான லட்சிய திமுகவை ஆரம்பித்தார். இந்த இடைப்பட்ட காலங்களில் அரசியலிலும் சினிமாவிலும் தொடர்ந்து சவாரி செய்து வந்தார் அதுவும் சிறப்புடன்.

கார்த்திக்: பழம்பெரும் நடிகர் முத்துராமன் அவர்களின் வாரிசான கார்த்திக் 2006ஆம் ஆண்டு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சில வருடங்களிள் அந்தக் கட்சியிலிருந்து மனக்கசப்பு காரணமாக வெளியேறியவர் தனது சொந்தக் கட்சியான நாடாளும் மக்கள் கட்சியை தொடங்கினார். அதிமுகவுக்கு ஆதரவாக ஒரு தேர்தலிலும் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரத்குமார்: சமத்துவ மக்கள் கட்சி என்ற தனது சொந்த கட்சியைத் துவக்கிய சரத்குமார் அதற்கு முன்னர் திமுக, அதிமுகவிலும் நின்று தேர்தல்களில் ஜெயித்து உள்ளார். தேர்தல் வரும் சமயங்களில் அவ்வப்போது தனது கட்சி சார்பில் பேட்டிகள் வெளியிடுவதும் மனைவி ராதிகாவுடன் பிரச்சாரம் செய்வதும் என்று பிஸியாக மாறிவிடுவார். தற்போது அதிமுக கூட்டணியில் தவறாமல் இடம்பிடித்து வருகிறார் நமது சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்.

விஜயகாந்த்: முன்னணி நடிகராக விஜயகாந்த் இருந்தபோதே திமுகவின் அனுதாபியாக இருந்தார் நிச்சயம் இவர் ஒருநாள் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்த்த நிலையில் தனது சொந்த கட்சியான தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை தனது மனைவி மற்றும் மச்சானுடன் இணைந்து துவக்கினார். குறுகிய காலத்தில் நல்லதொரு நன்மதிப்பைப் பெற்ற பின்னர் எதிர்க்கட்சியாகவும் உயர்ந்தார். பின்னர் சரியான அரசியல் முடிவுகள் எடுக்காத காரணத்தால் கட்சியின் வரவேற்பு படிப்படியாக குறையத் துவங்கியது. மேலும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் துடிப்புடன் இயங்க முடியாமல் கேப்டன் அவர்கள் இருந்து வருகிறார். அவர் சீக்கிரம் குணமடைய வாழ்த்துவோம்

கருணாஸ்: நகைச்சுவை நடிகர் கருணாஸ் தனது கட்சியான முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார். அதில் வெற்றியும் பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். தொடர்ந்து படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில், குணசித்திர வேடங்களிலும் நடித்து வருபவர் தமது அரசியல் ரீதியான விமர்சனங்களிலும் பேட்டியிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது வரை அவரது கட்சி அதிமுகவிற்கு ஆதரவு அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சீமான்: கதாசிரியர், இயக்குனர், நடிகர் என்று பன்முகம் கொண்ட சீமான் அவர்கள் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் கட்சியான நாம் தமிழர் கட்சியை ஒருங்கிணைத்து அவரது மறைவிற்குப் பின்னர் அதன் தலைவரானார். நாம் தமிழர் கட்சியின் முக்கியமான தலைவராக திகழ்ந்து வருபவர் தொடர்ந்து ஆளும் திமுகவையும் பாஜகவை விமர்சிக்க தவறுவதில்லை. அவ்வபோது ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், சிறப்பு தோற்றத்திலும் நடித்து வருகிறார்.

கமல்ஹாசன்: இந்த வரிசையில் கடைசியாக நுழைந்தவர் சகலகலா வல்லவன் கமல்ஹாசன். திரைப்படங்களில் தனது அசாத்திய திறமையால் தமிழக மக்களின் பேராதரவை பெற்ற கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்னும் பெயரில் கட்சியை மதுரையில் கோலாகலமாக துவக்கினார். இரண்டு தேர்தலை சந்தித்து இருப்பவர் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளார். கோயமுத்தூரில் வெற்றியின் விளிம்பு வரை சென்று தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமா அரசியல் என்று இரண்டு குதிரைகளையும் சமமாக இயக்க செய்ய பெரும் முயற்சி எடுத்து வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்