நாம் இவர்களையெல்லாம் லிஸ்ட்டிலேயே வைத்திருக்க மாட்டோம். ஆனால் ஒரு கையால் தருவதை மறு கைக்கு கூட தெரியாத அளவுக்கு நடந்து கொள்வார்கள். அப்படியொரு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் நடிகர் பிரசாந்தும், நடிகர் விஜய் வசந்தும். ஒரு கோடி வரைக்கும் நான் செலவு பண்றேன் என்று சொல்லி உள்ளே வந்த லாரன்ஸ், சில கேரவேன்களையும் அவ்வப்போது சாப்பாட்டையும் அளித்து உற்சாகப்படுத்தியிருக்கிறார். (இதன் செலவு சுமார் ஒரு லட்சம் என்கிறார்கள்) ஆனால் கண்ணுக்கு தெரியாமலே ஒதுங்கி நின்று உதவி செய்த லிஸ்ட்டில் இருக்கிறார்கள் மேலே நாம் சொன்ன இருவரும்.

இயற்கை உபாதைக்கு இடமில்லை என்று தெரிந்ததும் தன் செலவில் ஐந்து நடமாடும் கழிப்பறைகளை கொண்டு வந்து நிறுத்திவிட்டார் விஜய் வசந்த். கூட்டம் கூடிய முதல் நாளே அடுத்த வேளை சாப்பாடு எப்படி? என்று தெரியாமல் திண்டாடிய போராட்ட இளைஞர்களுக்கு போதும் போதும் என்கிற அளவுக்கு உணவை அனுப்பி வைத்தவர் பிரசாந்த். நாலா புறத்திலிருந்தும் ஸ்பான்சர்கள் உணவு கொடுக்க வருகிற வரைக்கும் தன் செலவிலேயே அனுப்பி வைத்தாராம் பிரசாந்த்.

பிரபல தயாரிப்பாளர் ஒருவரும் இளைஞர்களின் அத்யாவசிய தேவைகளுக்காக லட்சங்களை அள்ளி இறைத்திருக்கிறார். விரைவில் 250 கோடி செலவில் படம் எடுக்கவிருக்கும் தயாரிப்பாளர் அவர். இந்த இடத்தில் அவர் பெயரை சொன்னால் அவருக்கு பிரச்சனை வரும். அதனால் தவிர்ப்போமே!

திரையுலகத்தை பொருத்தவரை அந்த ஹீரோக்கள் பெரிய இடத்தில் இல்லாமலிருக்கலாம். ஆனால் நிஜத்தில்? அள்ளிக் கொடுத்ததாக பம்மாத்து பண்ணும் ஹீரோக்களை நம்பும் இளைஞர்கள் இந்த நிஜ ஹீரோக்களுக்கும் ஒரு கை கொடுங்கப்பா…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here