நடிகர்கள் மற்றும் நடிகைகளை பாதுகாப்பாக வைத்திருக்கும் பவுன்சர்களுக்கு அவர்களுடைய சம்பளத்திலிருந்து தான் பணம் ஒதுக்க வேண்டும் என சமீபத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் கூட முடிவெடுத்தது ஆனால் பெரிய ஹீரோக்கள், ஹீரோயின்களை புக் செய்யும் சமயத்தில் இது போன்ற விஷயத்தை ஃபாலோ செய்ய முடியவில்லை அவர்களுக்கு தேவையானதை எல்லாம் செய்து கொடுத்தால் தான் படத்திற்கான கால் சீட் கிடைக்கிறது
இதை வைத்துப் பார்க்கையில் இந்த பவுன்சர்கள் கலாச்சாரம் சமீபத்தில் தான் வந்ததா என கேட்டால், இல்லை, அது 70களின் காலகட்டத்திலேயே இருந்தது. இந்த பவுன்சர்கள் கான்செப்ட்டை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதே மக்கள் திலகம் எம்ஜிஆர் தான்.
எம்ஜிஆரை சுற்றி எப்போதுமே ஒரு ஐந்து பேர் இருப்பார்களாம். இந்த ஐந்து பேரை மீறி எம்ஜிஆர் இடம் ஒரு துரும்பு கூட போக முடியாது. அவர்களுக்கு எம்ஜிஆர் சொல்வது தான் வேதவாக்கு. இந்த குழுவுக்கு தலைவராக இருந்தவர் தான் எம்ஜிஆரின் வலது கரம் ஆர் எம் வீரப்பன்.
நயன்தாரா பவுவுன்சர்களுக்கு மட்டும் கொடுக்கும் சம்பளம்
அப்படி எம்ஜிஆரின் காலகட்டங்கள் கடந்த பிறகு 90களில் கேப்டன் விஜயகாந்த் நடிக்கும் படப்பிடிப்புகளில் எல்லாம் அவர் ஒருவர் தான் மொத்த யூனிட்டுக்கும் பவுன்சர் என்று கூட சமீபத்தில் தயாரிப்பாளர் ஒருவர் பெருமையாக சொல்லி இருந்தார்.அந்த அளவிற்கு சக நடிகர்களுக்கு பாதுகாப்பாக இருப்பாராம் கேப்டன்.
நடிகை நயன்தாராவின் பவுன்சர்களுக்கு மட்டும் இரண்டு கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறது என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. போதாத குறைக்க அனிருத், அட்லி போன்றவர்கள் கூட தங்களுக்கு பவுன்சர்கள் வேண்டுமென தயாரிப்பாளர்களிடம் அடம் பிடித்து கொண்டிருக்கிறார்கள்.
- ஒரு இடத்துல சம்பாதித்ததை 9 இடத்தில் முதலீடு செய்யும் நயன்-விக்கி ஜோடி
- கவினுக்கு ஜோடி, அந்த ஹீரோவுக்கு அக்காவா.?
- நயன்தாராவோடு ரொமான்ஸ் பண்ணும் கவின், ட்ரெண்டிங் புகைப்படம்