இந்த காலத்து நிழல்கள் ரவி என பெயர் எடுக்கும் நடிகர்.. சத்தமே இல்லாமல் சாதித்துக் காட்டும் ஹீரோ

தமிழ் சினிமாவிக்கென்று  ஒரு வழக்கம் உண்டு ஒரு படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துவிட்டால். உடனே அந்தக் கதையை போலவே பல கதைகள் வருவது உண்டு இது எம்ஜிஆர் காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது.

அன்று எம்ஜிஆர், ரஜினி,ராமராஜன், அர்ஜுன், விஜயகாந்த் இன்னும் பல நடிகர்கள் ஒரே பார்முலாவை மாத்தி மாத்தி எடுத்து வெற்றி கண்டதும் உண்டு. அதேபோல் விஜய், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் ஒரே பார்முலாவை பாலோ செய்து கொண்டிருக்கிறார்கள்.

Also Read: பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரமின் டெடிகேஷன்.. நெகிழ்ந்து போன நிழல்கள் ரவி

இவர்கள் தான் இப்படி என்றால் அந்த காலத்தில் நிழல்கள் ரவி போன்ற ஆட்கள் ஒரே மாதிரியான பேய் படங்களில் நடித்துக் கொண்டே இருப்பார்கள். 13 ஆம் நம்பர் வீடு, மை டியர் லிசா, இன்னும் பல பேய் படங்களில் நிழல்கள் ரவி நடித்து இருக்கிறார். இப்பொழுது நிழல்கள் ரவி என்று பெயர் எடுத்த ஒரு நடிகர் இவர் பார்முலாவை பின்பற்றி கொண்டிருக்கிறார்.

நிழல்கள் ரவி போலவே சற்று வித்தியாசமான நடிகர் அருள்நிதி. அவருடைய சினிமா வாழ்க்கையை  மாற்றி அமைத்தது டிமான்டி காலனி பேய் படம். அவருக்கு இது மிகப் பெரிய வெற்றி அளித்தது இதற்கு முன் பல படங்களில் நடித்தாலும் இந்த படம்தான் அவருக்கு ஒரு பெயர் வாங்கி கொடுத்தது.

Also Read: ஹாலிவுட் நடிகர் போல் இருக்கும் நிழல்கள் ரவி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

அதிலிருந்து அருள்நிதி ஒரே லைனாக பேய் படங்கள்தேர்வு செய்ய ஆரம்பித்தார். இவர் இப்படி நடிப்பது சினிமா ரசிகர்களிடமே சலிப்பை ஏற்படுத்தினாலும் இவருக்கு இந்த மாதிரி படங்கள்தான் கைகொடுத்து உதவுகிறது. இவரும் அந்த காலத்தில் நிழல்கள் ரவி மாதிரி சைலன்டாக பல பேய் படங்கள் கொடுத்து வருகிறார். எல்லா படங்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அருள்நிதி கிட்டத்தட்ட 15 படங்களில் நடித்திருப்பார் அதில் 7,8 படங்கள் சஸ்பென்ஸ், த்ரில்லர் படங்கள் தான். அத்தனை படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை கொடுத்து இவரது வளர்ச்சிக்கு உதவியுள்ளது. சத்தமே இல்லாமல் ஜெயம் ரவி, பருத்திவீரன் கார்த்தி போன்றவர்களுக்கு இனி வரும் காலங்களில் நிச்சயமாக அருள்நிதி போட்டி கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.

Also Read: டப்பிங்கில் மிரட்டிய நிழல்கள் ரவியின் 5 படங்கள்.. உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த அந்த ஒரு படம்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை