கபாலி, பைரவா இரண்டு படங்களுக்கு முன் சந்தோஷ் நாராயணனும் ஒரு மிடில் கிளாஸ் மியூசிக் டைரக்டர்தான். அவ்விரு படங்கள் தந்த அந்தஸ்த்தே வேற லெவல்! இந்த நேரத்தில் அவர் வீட்டு கதவை தட்டி, நம்ம படத்துக்கு மியூசிக் போடுங்க என்று கேட்ட அந்த பிரபல ஹீரோவிடம், கதையை சொல்ல சொல்லுங்க முதலில் என்றாராம் அவர்.

அதற்கப்புறம் அதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கதையை கேட்டவர், உதட்டை பிதுக்கியபடி… சாரி சார். என்னால இந்த படத்துக்கு இசையமைக்க முடியாது. கதை ரொம்ப புவரா இருக்கு என்றாராம். சம்பளத்தை காஸ்ட்லியாக வாங்கும் சந்தோஷ் நாராயணன், கதையை புவராக இருக்கிறது என்று சொல்ல உரிமை இருக்கிறதா இல்லையா? என்பது வேறு விஷயம். ஆனால் விருப்பம் இல்லாதவரை விடாமல் துரத்துவது நியாயமில்லை அல்லவா?

அதற்கப்புறம் ஹீரோ செய்த காரியம் அவ்வளவு சரியாக இல்லை. நள்ளிரவில் சந்தோஷ் நாராயணனுக்கு வரும் அனாமத்து கால்கள், “தம்பி… எங்க ஹீரோ படத்துக்கே மியூசிக் பண்ண முடியாதுன்றியா? நடக்கறதே வேற. பார்த்துக்கோ” என்று செல்லமாக மிரட்டுகிறார்களாம். இன்னும் சிலர், “நான் அந்த கட்சியோட மாவட்ட செயலாளர். நம்ம ஹீரோ படத்துக்கு மியூசிக் போட மாட்டேனுட்டீயாமே?” என்று கேட்க, நொந்து போயிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

காற்றில் ‘கத்தி சண்டை’ போடும் ஹீரோக்களுக்கு நடுவில் ஒரிஜனலாக கத்தி வீசி முக்கிய பதவியை பிடித்த ஹீரோ. இப்போது இன்னொரு சங்கத்திற்கும் குறி வைத்திருக்கிறார். இவ்வளவு பெரிய தைரியசாலியை சந்தோஷ் நாராயணன் ‘ஜஸ்ட் லைக் தட்’ போல டீல் பண்ணியதுதான் கோபத்தை உண்டாக்கியிருக்கக் கூடும். மற்றபடி நல்ல மனுஷன்தான்பா அவரும்!