Tamil Cinema News | சினிமா செய்திகள்
காப்பி அடிச்சாலும் ஒரு நியாயம் வேண்டாமா.. ஹீரோ படத்துக்கு கொடுத்த திருட்டு சர்டிபிகேட் பட்டம்
சிவகார்த்திகேயன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் கடந்த வாரம் வெள்ளியன்று வெளியான திரைப்படம் ஹீரோ. இரும்புத்திரை புகழ் பி.எஸ். மித்ரன் இயக்கிய இந்த படத்தை கே.ஜெ.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
படம் வெளியாவதற்கு முன்னரே அட்லியின் உதவி இயக்குனர் போஸ்கோ ஹீரோ படத்தின் கதை தன்னுடையது என இயக்குனர் மற்றும் எழுத்தாளர் சங்கத்தில் முறையீட்டு இருந்தார். கதை திருட்டு விவகாரம் குறித்து தற்போது தலைவராக இருக்கும் பாக்யராஜ் முன் நின்று விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் போஸ்கோ மற்றும் மித்ரன் இருவரிடமும் கதை கருவை சுருக்கமாக எழுதி தர சொல்லி கேட்டுள்ளனர். எழுதிக் கொடுத்ததை ஒப்பிட்டுப் பார்த்ததில் போஸ்கோ படத்தின் கதைதான் ஹீரோ என தெளிவாக தெரிந்தது. மேலும் இதற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் எழுத்தாளர் சங்கம் மூலம் மித்ரனுக்கு கோரிக்கை விடப்பட்டது.
ஆனால் பட வெளியீட்டிற்குப் பிறகு கண்டுகொள்ள மாட்டார்கள் என மித்ரன் நினைத்து விட்டார் போல. அழைப்புக்கு வராமல் தட்டிக்கழித்த மித்ரனுக்கு ஆப்பு வைக்கும் வகையில், எழுத்தாளர் சங்கம் போஸ்கோவின் கதையை மித்ரன் திருடி விட்டார் என அறிக்கையை வெளியிட்டுவிட்டது.
இதனால் சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் தரப்பு கடும் அப்செட்டில் உள்ளது. ஏற்கனவே படம் வெளியான பல இடங்களில் பலமாக காற்று வாங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மேலும் இந்த கதை திருட்டு விவகாரம் வந்தது பேரிடியாக அமைந்துள்ளது.

proof
