வடமாநிலங்களில் பிரபலமானவர் சுவாமி ஓம். இவர் பேசினாலே அதில் சர்ச்சை மட்டும் தான் இருக்கும்.

கலர்ஸ் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 10 போட்டியாளர்களில் இவரும் ஒருவர். இவரது பெயர் வெளி உலகத்திற்கு தெரியவந்ததே இவர் செய்து குறும்புகள் மூலம் தான்.

நிகழ்ச்சியில் இவர் சமையலறையில் சிறுநீர் கழித்தது அம்பலப்படுத்தப்பட்டது. அதே போல் சக போட்டியாளர்கள் மீது சிறுநீரை ஊற்றி விட்டார்.

ஆனால் அது வெறும் தண்ணீர் தான் என பின்னர் மறுத்தார். இதே போல் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்திய சல்மான் கானுடன் கடுமையாக சண்டை போட்டார்.

எலும்பை உடைத்து விடுவேன் என சல்மான் கானை மிரட்டினார். மேலும் சல்மான் கானிற்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகவும், அவருக்கு லண்டனில் திருமணம் நடைபெற்ற ஒரு மகள் இருப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். இதற்கு சல்மான்கான் தரப்பு மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.