செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

நொங்கை பிதுக்கியதால் மாலை போட்டு ஓடிய ஹீரோ.. வார் பிடிக்க காத்திருக்கும் செல்வராகவன்

இயக்குனர் செல்வராகவன் கடைசியாக இயக்கிய படம் “நானே வருவேன்”. அதுவும் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த படம். அதன்பின் கிட்டத்தட்ட மூன்று வருடம் ஆகியும் படங்களை இயக்கவில்லை. இப்பொழுது ஒரு படத்தை இயக்கி வருகிறார் . பல தடைகளை தாண்டி இப்பொழுது அந்த படம் 70% முடிந்திருக்கிறது.

2022ஆம் ஆண்டுக்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் செல்வராகவன். இவர் நடிப்பில் பீஸ்ட், பாகாசுரன், மார்க் ஆண்டனி, ராயன் போன்ற படங்கள் வெளிவந்தது. நடிப்பு மற்றும் இயக்கம் இரண்டையும் தாண்டி பாடல்கள் எழுதுவதிலும் செல்வதாகவும் கைதேர்ந்தவர்.

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களுக்காக பிலிம்பேர் அவார்டுகளையும் வாங்கி இருக்கிறார் செல்வராகவன். தற்போது 2005 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த படம் 7ஜி ரெயின்போ காலனி, இப்பொழுது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்.

இந்த படத்தில் அப்போது ஹீரோவாக நடித்த ஏ எம் ரத்தினத்தின் மகன் ரவி கிருஷ்ணா தான் இப்பொழுதும் நடித்து வருகிறார். இடையில் இந்த படம் பணப்பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு கில்லி படத்தை மீண்டும் ரிலீஸ் செய்து ஏ எம் ரத்தினம் ஓரளவு சம்பாதித்து விட்டார்.

நிதி நெருக்கடியில் இருந்து தப்பித்த 7g ரெயின்போ காலனி படத்தில் இரண்டாம் பாகம் இப்பொழுது நடைபெற்று வருகிறது. திடீரென அந்த படத்தின் ஹீரோ ரவி கிருஷ்ணா சபரிமலைக்கு மாலை போட்டு சென்று விட்டார். இதனால் நடைபெற்று வந்த சூட்டிங்க்கு ஒரு மாதம் பிரேக் கொடுத்து விட்டனர். செல்வராகவன் கொடுத்த ஓவர் டார்சரால் தான் சபரிமலைக்கு செல்லலாம் என முடிவெடுத்து விட்டாராம் ஹீரோ ரவி கிருஷ்ணா.

- Advertisement -

Trending News