Connect with us

Cinemapettai

வசூலில் யாரு ஓட விட்டா பார்த்திங்களா?ஹீரோ Vs தம்பி மொத்த வசூல் நிலவரம்

hero-thambi-collection

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வசூலில் யாரு ஓட விட்டா பார்த்திங்களா?ஹீரோ Vs தம்பி மொத்த வசூல் நிலவரம்

கடந்த மாதம் 20ஆம் தேதி ஹீரோ மற்றும் தம்பி ஆகிய படங்கள் ஒரே தேதியில் ரிலீஸ் ஆகின. இரண்டு படங்களும் வெவ்வேறு கதைகள் கொண்டதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தும் வசூலில் எது முன்னிலை என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

பட வெளியீட்டின்போது தம்பி படத்தைவிட ஹீரோ படத்திற்கு பெரிய வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் படம் வெளியான பிறகு குடும்ப ரசிகர்களை கவர்ந்தது, தம்பி படம் என்பதே உண்மை. ஃபேமிலி சஸ்பென்ஸ் என்ற கதைக்களத்தில் உருவாக்கியுள்ள தம்பி படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதேபோல் ஹீரோ படம் கல்வியில் நடக்கும் முறைகேடுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சமூக அக்கரை கொண்ட படமாக மாறியது. இதனால் சிவகார்த்திகேயனிடம் என்டர்டைன்மென்ட்டை எதிர்பார்த்து வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனால் நாளுக்கு நாள் ஹீரோ படத்தின் வசூல் குறைவாகி தம்பி படத்தின் வசூல் அதிகரித்தது. இருந்தும் முதலுக்கு மோசமில்லை என்பதைப்போல் இரண்டு படங்களும் சமமான அளவு பாக்ஸ் ஆபிஸில் வசூலை ஈட்டியது என்றே தெரிகிறது.

பெரிய அளவில் வசூல் இல்லை என்றாலும் 3 வார முடிவில் சென்னையில் தம்பி படம் 3.75 கோடியும், ஹீரோ படம் 3.65 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகம் முழுவதும் ஹீரோ படத்தை விட சற்று அதிகமான வசூலை தம்பி பெற்றுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top