Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹீரோவை விரட்டும் தம்பி.. நான்காவது நாள் தலைகீழாக மாறிய வசூல் விவரம்
இந்த வார வெளியீடாக பெரும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் வெளிவந்த திரைப்படங்கள் ஹீரோ மற்றும் தம்பி. கூடவே சல்மான் கான் நடிப்பில் டப்பிங் படமாக தபாங் 3 என்ற படமும் வெளிவந்தது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஹீரோ. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கல்வி முறையை அடிப்படையாகக் கொண்டு வெளியான இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்களை கிடைத்தது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் சுமார் 10 கோடி வரை வசூல் செய்துள்ளது.
அதேபோல் கார்த்திக் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தம்பி. சஸ்பென்ஸ் திரில்லராக வெளிவந்த இந்தத் திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளது. இந்த படமும் தமிழகம் முழுவதும் சுமார் 6 கோடி வரை வசூல் செய்துள்ளது.
சென்னையில் ஹீரோ மூன்று நாள் முடிவில் 1.70 கோடியும், தம்பி படம்1.10 கோடியும் வசூல் செய்துள்ளன. தபாங் 3 திரைப்படம் சென்னையில் 55 லட்சம் வசூல் செய்துள்ளது. ஆனால் நான்காவது நாளில் வசூல் நிலவரம் தலைகீழாக மாறி உள்ளதாக தெரிகிறது.
ஹீரோ திரையிடப்பட்ட பல தியேட்டர்களில் தற்போது தம்பி படம் மாற்றப்பட்டுள்ளது. பக்கா ஃபேமிலி என்டர்டெய்னர் என்ற பெயர் பெற்று, தம்பி திரைப்படம் தற்போது குடும்ப ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
சிவகார்த்திகேயன் படங்களுக்கு பி அண்ட் சி பகுதிகளில் எப்போதுமே வரவேற்பு இருக்கும். ஆனால் தற்போது வெளிவந்துள்ள படம் பி அண்ட் சி ரசிகர்களை கவராத வகையில் டெக்னாலஜி என்ற பெயரில் ஆழமாக சென்றதால் அடி வாங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதேபோல்தான் சமீபத்தில் பிகில் படத்துடன் வெளிவந்த கைதி திரைப்படமும் மூன்று நாட்களுக்கு பிறகு வசூலில் கெத்து காட்டியது அனைவரும் அறிந்ததே.
