Tamil Cinema News | சினிமா செய்திகள்
நேருக்கு நேர் போட்டிபோடும் தனுஷ், சிவகார்த்திகேயன்.. சபாஷ் சரியான போட்டி
வளர்த்த கெடா மார்பில் முட்டுதே என்ற பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் ஆகிய இருவரின் வாழ்க்கையிலும் நன்றாகவே பொருந்துகிறது. ரெமோ படத்தின் வெற்றிவிழா மேடையில் தனுஷை பற்றி நேரடியாகவே சிவகார்த்திகேயன் பேசியது அனைவரும் அறிந்ததே.
சிவகார்த்திகேயன் சிலர் தன்னை அவர்கள் கைக்குள்ளேயே வைத்துக்கொள்ள நினைக்கிறார்கள் என்றும், வளர விடுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார். அப்போது பல பத்திரிகைகளில் இருவருக்கும் சண்டை என்று சொல்லிக் கொண்டாலும் தற்போது பொது விழாக்களில் எங்கு பார்த்தாலும் கட்டித்தழுவி கொண்டு தான் இருக்கின்றனர்.
தற்போது தனுஷ் படத்துடன் நேரடியாக போட்டி போட்ட முடிவெடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். தனுஷ் நடிப்பில் பொங்கல் தினத்தன்று வெளியான திரைப்படம் பட்டாஸ். தமிழ்நாட்டில் ஓரளவு நன்றாக ஓடிய படம் தான். அதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிவந்த திரைப்படம் ஹீரோ.
விமர்சக ரீதியாக படம் பாராட்டப்பட்டாலும் வசூல் ரீதியாக படம் சற்று அடங்கியது. அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் நடிப்பில் அதற்கு முன் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் வெற்றி தான் என்றும் கூறலாம். தற்போது சிவகார்த்திகேயன் ஹீரோ படம் தெலுங்கில் சக்தி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிட இருக்கிறது.
அதே தினத்தன்று தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படம் தெலுங்கில் லோக்கல் பாய் என்ற பெயரில் வெளியாக உள்ளது. இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொள்வதால் ரசிகர்களிடையே தெலுங்கில் எந்த படம் வெற்றி பெறும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

pattas-hero
சபாஷ்! சரியான போட்டி!
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
