ஏடிஎம்., ரசீது காகிதம் , அதில் பயன்படுத்தப்படும் மை ஆண்களின் விறைப்பு தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இன்றைய மெஷின் போன்ற வாழ்க்கை சூழ்நிலையில், மனிதனுக்கு மனநிம்மதி என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில், செக்ஸ் விஷயத்தில் ஆண்கள், பெண்கள் என பல்வேறு புதுபுதுப்பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

 அதில் குறிப்பாக ஆண்கள், 40 வயதுக்கு மேல், செக்ஸில் ஈடுபடும் போது, விறைப்பு தன்மை பிரச்சனையை அதிகளவில் சந்தித்து வருகின்றனர். இதற்கு வயது முதிர்வு, இதயக் கோளாறு, மன அழுத்தம், ஆபாச படங்களுக்கு அடிமையாவது என பல காரணங்கள் கூறப்பட்டாலும், தற்போது வெளியாகியுள்ள காரணம் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் உள்ளது.

செக்ஸ் விஷயத்துக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத், ஏடிஎம் மெஷின்களில் ரசீதுகளுக்காக பயன்படுத்தப்படும் காகிதம், மை ஆகிய இரண்டுமே இந்த பிரச்சனையை ஏற்படுத்தும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே போல, லாட்டரி டிக்கெட்டுகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் வழங்கப்படும் ரசீதுகளும் இந்த பிரச்சனை ஏற்படுத்தும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அதில் பிஸ்பினால்-ஏ என்ற ரசாயனம் அதிகளவில் காணப்படுவதே காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆண்களின் உடலில் ஆஸ்டிரோஜென் எனும் ஹார்மோனை, அதிகளவில் சுரக்கவைப்பதால், இந்த விறைப்பு பிரச்சனை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஏடிஎம்.,களில் ரசீதை எடுத்த பின் கைகளை நன்கு சோப்பு போட்டு கையை சுத்தமாக கழுவுவதும், சட்டை அல்லது பேண்ட் பாக்கெட்டுகளுக்கு பதிலால பர்ஸில், அந்த ரசீதுகளை வைப்பது நல்ல தீர்வாக அமையும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.