Connect with us

Cinemapettai

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளை ஓரம் கட்டிய கீர்த்தி சுரேஷ்.. 2020ல படம்  ஓடலனாலும் இவங்க வேற லெவல்!

keerthy-suresh-2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளை ஓரம் கட்டிய கீர்த்தி சுரேஷ்.. 2020ல படம்  ஓடலனாலும் இவங்க வேற லெவல்!

ஒவ்வொரு வருடமும், வருட இறுதியில் டாப் நடிகர், நடிகைகளின் லிஸ்ட்டை பல பத்திரிக்கை நிறுவனங்களும், சோஷியல் மீடியா நிறுவனங்களும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

இந்த ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவடைய இருப்பதால், பல பத்திரிக்கை நிறுவனங்களும், சோசியல் மீடியா நிறுவனங்களும் இந்த ஆண்டிற்கான டாப் நடிகை, நடிகர்களின் லிஸ்டை  வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் 2020ஆம் ஆண்டிற்கான ட்விட்டர் தளத்தில், தென்னிந்திய அளவில் முதல் பத்து இடங்களை எந்தெந்த நடிகைகள் பெற்றிருக்கின்றனர் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

அதாவது, தென்னிந்திய அளவில் எந்த நடிகையைப் பற்றிய ட்வீட் அதிக அளவில் பதிவாகி உள்ளது என்ற அடிப்படையில் ட்விட்டர் இந்தியா நிறுவனம் இந்த லிஸ்டை வெளியிட்டுள்ளது.

மேலும் ட்விட்டர் பதிவுகளின் அடிப்படையில், ட்விட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள டாப் 10 தென்னிந்திய நடிகைகளின் லிஸ்ட் இதோ:

  • கீர்த்தி சுரேஷ்
  • காஜல் அகர்வால்
  • சமந்தா அக்கினேனி
  • ராஷ்மிகா மந்தண்ணா
  • பூஜா ஹெட்ஜ்
  • டாப்ஸி
  • தமன்னா
  • ரகுல் பிரீத் சிங்
  • ஸ்ருதிஹாசன்
  • திரிஷா

இதன்படி, டாப் 10 நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தை கீர்த்தி சுரேஷ் பெற்றிருக்கிறார்.

actresses-list

actresses-list

மேலும் இந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பென்குயின், மிஸ் இந்தியா ஆகிய படங்கள் OTTயில் வெளியானாலும், அவை எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top