சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விவேகம் படம் நேற்று வெளியானது.இப்படத்தின் லாஜிக்கில் சில குழப்பங்கள் இருந்தாலும் ஹாலிவுட் பாணியில் படம் இருப்பதால் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளனதமிழ்நாட்டில் மட்டும் ரூ. 17 கோடியை எட்டியுள்ளது.ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ. 1.8 கோடியை வசூலித்துள்ளது.

கேரளாவில் ரூ. 2,9 கோடியையும், கர்நாடாகாவில் ரூ. 3.75 கோடியையும் பெற்றுள்ளது.மொத்தமாக இந்தியளவில் ரூ. 26 கோடியை பெற்றுள்ளதாம்.வெளிநாடுகளில் ரூ. 7.25 கோடியை பெறும் உலகளவில் முதல்நாளில் ரூ.33 கோடியை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித் நடிப்பில் நேற்று வெளியான விவேகம் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து கலவையான தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தப் படம் உலகெங்கும் ரூ 30 கோடியை வசூலித்திருப்பதாகவும், தமிழ் நாட்டில் மட்டும் ரூ 20 கோடி வரை படம் வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இது மிகைப்படுத்தப்பட்ட வசூல் கணக்கு என்றும், தமிழகத்தில் மட்டும் ரூ 14 முதல் 15 கோடியை வசூலித்திருக்கும் என்றும், சர்வதேச அளவிலான வசூல் கணக்கு இன்னும் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கிறார் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் தகவல் தொகுப்பாளராகன ராமானுஜம்.

சென்னை மற்றும் கோவையில் விவேகம் வசூல் இன்னும் மூன்று நாட்கள் நன்றாகவே இருக்கும் என்பது இவர் கணிப்பு. முன்பதிவு நிலவரங்களும் அப்படித்தான் உள்ளன.

மதுரை- ராமநாதபுரம், சேலம், திருச்சி – தஞ்சை பகுதி நிலவரம்தான் 50 சதவீதம் சந்தேகமாக இருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ரூ 2.25 கோடி எம்ஜி அடிப்படையில் வெளியிடப்பட்ட மதுரை – ராமநாதபுரம் பகுதியில் நாளை வரை ரூ 75 லட்சம் வரை வசூலாகும் என்றும், மீதியை எப்படி எடுப்பது என்றும் புரியவில்லை என்கிறார்கள் அந்தப் பகுதி தியேட்டர்காரர்கள்.விவேகம் படத்தின் முதல் நாள் வசூல் ஏரியாவாரியாக இன்று மாலை வெளியாகும்.