அவார்டு, வசூல் என அள்ளி குவித்த இரவின் நிழல்.. ஆனாலும் சூடுபட்டு விட்டேன் என புலம்பிய பார்த்திபன்

இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் தன்னுடைய வித்தியாசமான கதைகளினாலும், நடிப்பினாலும் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணி புரிந்ததால் என்னவோ அவருடைய அதே நக்கலும், நையாண்டியும் இவருடைய படங்களிலும் இருக்கும். புதிய பாதை என்னும் திரைப்படத்தின் மூலம் தனக்கான கலை பயணத்தை இவர் ஆரம்பித்தார்.

90களின் இறுதியில் சரத்குமார், விஜயகாந்துக்கு இணையாக ஹீரோவாக இருந்தார். அதன் பின்னர் இவர் நடித்த எந்த படங்களும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றி பெறவில்லை. 2 வருட இடைவெளிக்கு பிறகு 2012 ஆம் ஆண்டு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்னும் திரைப்படத்தின் மூலம் மீண்டும் இயக்குனராக தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.

Also Read: பலான காட்சிகளில் நடிக்கவே இல்ல.. இரவின் நிழல் நடிகை விட்ட கட்டுக்கதை, தண்டவாளத்தில் ஏறிய வண்டவாளம்

அதன்பின்னர் 2019 ஆம் ஆண்டு ‘ஒத்த செருப்பு’ என்னும் உளவியல் திரைப்படத்தை இயக்கினார். படம் முழுக்க இவர் ஒருவர் மட்டுமே நடித்திருந்தார். இந்த புதுமையான முயற்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இவர் மற்றுமொரு புதிய முயற்சியாக கையில் எடுத்த படம் தான் இரவின் நிழல். இந்த படம் 2022 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

இந்த படம் முழுவதும் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட நான் லீனியர் திரைப்படம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படமே இவருக்கு சோதனையாகவும் அமைந்தது. படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இவர் ஏ ஆர் ரஹ்மான் முன்னிலையில் மைக்கை தூக்கி எரிந்தது மிகப்பெரிய சர்ச்சையானது.

Also Read: அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் நடிகைகள் என்ஜாய் பண்றாங்க.. அம்பலப்படுத்திய இரவின் நிழல் நடிகை

இவர் இரவின் நிழல் படத்தை உலகின் முதல் நான் லீனியர் படம் என்று சொன்னதை, சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் மறுத்தார். இதனால் இவர்களுக்குள் பயங்கர வார்த்தை போர் நடைபெற்றது. அதே போல் அமேசான் பிரைமில் இந்த படம் ரிலீஸ் ஆகியது. அந்த படத்தை கிளிக் செய்யும் போது அதன் குறிப்பில் இந்த படம் உலகின் இரண்டாவது நான் லீனியர் திரைப்படம் என்றும், இந்த படத்தின் இயக்குனர் பொய் சொல்லுகிறார் என்றும் வந்தது.

இப்படி அடிமேல் அடிவாங்கிய பார்த்திபன் சமீபத்தில் ஒரு மேடையில், இனி அவார்டுக்காக படம் எடுக்க போவதில்லை என்றும், கமெர்சியல் படங்களையே இயக்க இருப்பதாகவும் கூறினார். மேலும் இரவின் நிழல் படத்தின் மொத்த வசூல் 15 கோடி எனவும், இந்த படம் இதுவரை 115 விருதுகள் வென்று இருக்கிறது எனவும் பார்த்திபன் கூறியிருக்கிறார்.

இயக்குனர் பார்த்திபனுக்கு இரவின் நிழல் எந்த அளவுக்கு பெயர் வாங்கி கொடுத்ததோ அதே அளவுக்கு பல ட்ரோல்களையும் சந்தித்தார். போதாத குறைக்கு இந்த படத்தில் நடித்த பிரகிடா பேசிய ஒரு சில கருத்துக்களுக்கு எதிர்ப்பு வந்தது, மேடையில் மைக்கை தூக்கி போட்டது என சில விஷயங்களுக்கு பார்த்திபன் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார்.

Also Read: கழுதைக்கு 9 லட்சம் சம்பளம்.. இரவின் நிழல் படத்தை வைத்து நடிகர்களுக்கு பார்த்திபன் சொல்றது இதுதான்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்