அட ஆமாங்க தற்பொழுது படத்துக்கான கிராபிக்ஸ் வேலை செய்த ஒரு நபர் சொல்லியே சூப்பர் மேன் மீசையுடன் ஜஸ்டிஸ் லீக் படத்தில் நடித்த விஷயம் வெளியாகியுள்ளது.

ஹென்றி காவில். இவர் பிரிட்டிஷ் நடிகர். இவர் ‘ஸ்டார் டஸ்ட்’, ‘கவுண்ட் ஆப் மான்டே கிறிஸ்டோ’, ‘இம்மார்ட்டல்ஸ்’ போன்ற பல படங்களில் நடித்தவர். மேலும் இங்கிலாந்தில் பல டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்து பிரபலம் ஆனவர். எனினும் இவர் உலக பேமஸ் ஆனதற்கு காரணம் இவர் சூப்பர் மேன் ஆக நடித்தது தான்.
2013ல் வெளியானது டி.சி காமிக்சின் “மேன் ஆப் ஸ்டீல்”. இதில் சூப்பர் மேன் ஆக நடித்தார் ஹென்றி காவில். சூப்பர் மேன் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் அது தான். பின்னர் அதன் தொடர்ச்சியாக 2016 இல் பேட்மேன் vs சூப்பர்மேன் ரிலீஸ் ஆகி முந்தயப்படத்தின் ரெகார்டுகளை தகர்த்தெறிந்து.

இந்த படங்களை இயக்கிவர் சாக் சினிடர். இவர் இயக்கத்தில் இந்த வருடம் ரிலீஸ் ஆகியுள்ளது ஜஸ்டிஸ் லீக். உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இப்படம்.
இப்பொழுதே தான் இந்த மீசை விஷயம் வெளியே வந்துள்ளது. சாக் சினிடர், ஜஸ்டிஸ் லீக் முழுவதும் முடித்து விட்டு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு அனுப்பி விட்டார். பின்னர் சூப்பர் மானாக நடித்த ஹென்றி காவில் ‘பரமௌன்ட் பிக்ச்சர்ஸ்’ தயாரிப்பில் உருவாகும் டாம் க்ரூஸின் மிஷன் இம்பொசிப்பிலே படத்தின் 6 ஆம் பாகத்தில் நடிக்க சென்று விட்டாராம். அந்த படத்தில் மீசையுடன் இருப்பது போன்ற கதாப்பாத்திரம்.

இந்நிலையில் சில காட்சிகளில் ஜஸ்டிஸ் லீக் படத்தில் ரீ-சூட் செய்ய வேண்டிய நிலை வந்துள்ளது. எனவே வார்னர் ப்ரோஸ் அழைப்பு விடுததால் மீண்டும் நடித்துக்கொடுக்க வந்துள்ளார் நம் சூப்பர் மேன். எனினும் மீசையை எடுக்க வேண்டும் என்ற பொழுது தன் மானேஜர் மூலம் பரமௌன்ட் பிக்ச்சர்ஸ் இடம் கேட்க அவர்கள் சம்மதிக்கவில்லை. எனவே காண்ட்ராக்ட் காரணத்தால் அவரும் மீசையை எடுக்க சம்மதிக்கவில்லை.

பரமௌன்ட் பிக்ச்சர்ஸ் இடம் வார்னர் ப்ரோஸ் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்கள். நீங்கள் மீதி எடுக்கும் படத்தில் ஒட்டு மீசை வைத்துக்கொள்ளுங்கள், நாங்கள் க்ராபிக்ஸ்க்கு ஆகும் செலவை கொடுத்து விடுகிறோம் என்று. இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. எனவே அவர்கள் மீசையுடன் சூப்பர் மானின் காட்சிகளை படம் பிடித்து விட்டு பின்னர் அவரின் மீசையை (சிஜி) கிராஃபிக்ஸ் மூலம் நீக்கி கிளீன் ஷேவ் போல் காண்பித்திருக்கிறார்கள்.

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியன் தன் காரணத்தால் சில ஏஜென்சிகளுக்கு அந்த மீசையை மழைக்கும் வேலையை பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள் வார்னர் ப்ரோஸ். அதில் எதோ ஒரு கம்பெனி சொதப்பி விட, சில காட்சிகளில் சூப்பர் மேனின் மேல் உதடு பிளவு பட்டது போல் படத்தில் தோன்றும். இந்த மீசையை மறைக்கும் க்ராபிக்ஸ் வேலைக்காக வார்னர் ப்ரோஸ் செலவு செய்த தொகை 25 மில்லியன் டாலர்களாம்.