Tamil Cinema News | சினிமா செய்திகள்
விசாரணையில் மாட்டிக்கொண்ட ஹேமந்த்.. இனிமேல் நடிக்க முடியாது பாஸ்
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை பற்றி தற்போது அடுக்கடுக்கான புது புது முடிச்சுகள் அவிழ்ந்து வருகின்றன. பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா சமீபத்தில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஏன் இவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் போன்ற அடுக்கடுக்கான சந்தேகங்கள் போலீசாரிடம் தொடர்ந்தது. அதனடிப்படையில் சித்ராவின் பெற்றோர் மற்றும் வருங்கால கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் ஹேமந்துக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், சித்ரா சம்பாதித்த பணத்தில் ஆடம்பர செலவுகள் செய்ததால் கல்யாணத்திற்கு எப்படி செலவு செய்யப்போகிறோம் போன்ற கேள்விகள் சித்ரா மனதில் எழும்பியதால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.
சித்ரா இறந்த முதல், இரண்டு நாட்கள் ஹேமந்த் முகத்தில் ஏகப்பட்டசோகங்கள் தெரிந்தது. ஆனால் நாளுக்கு நாள் அவரால் தொடர்ந்து சோகமாக நடிக்க முடியவில்லை.
மேலும் போலீசாரின் விசாரணையில் அவர்களது கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க முடியாமல் திணறி உள்ளார். அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மேலும் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.
அந்த விசாரணையில்தான் ஹேமந்த் சித்ராவை காரில் அழைத்து வந்ததும், அப்போது மற்றொரு நடிகருடன் ஒப்பிட்டு ஆபாசமாக பேசியது போன்ற உண்மைகள் வெளிவர தொடங்கின. இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ஹேமந்த் ஒரு கட்டத்திற்கு மேல் கண்ட்ரோல் பண்ண முடியாமல் செத்து தொல என்று சொல்லி விட்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.
உண்மையாக காதலித்த சித்ரா, இவர் சொன்ன வார்த்தையை தாங்க முடியாமல் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக ஹேமந்த் விசாரணையில் கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

chitra
