மெர்சல் 2 விஜய் ரசிகர்களுக்கு ஹேமா ருக்மணி கொடுத்த இன்ப அதிர்ச்சி (வீடியோ உள்ளே).! - Cinemapettai
Connect with us

Cinemapettai

மெர்சல் 2 விஜய் ரசிகர்களுக்கு ஹேமா ருக்மணி கொடுத்த இன்ப அதிர்ச்சி (வீடியோ உள்ளே).!

mersal vijay

News | செய்திகள்

மெர்சல் 2 விஜய் ரசிகர்களுக்கு ஹேமா ருக்மணி கொடுத்த இன்ப அதிர்ச்சி (வீடியோ உள்ளே).!

தளபதி படம் வருகின்றது என்றாலே திரையரங்கிற்கு திருவிழா தான். அதே நேரத்தில் வெற்றிக் கூட்டணி அட்லீயுடன் வருவது கூடுதல் சரவெடி தான்.

விஜய் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் மெர்சல், ரகுமான் இசை, ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்தின் 100வது படம், வடிவேலு ரீஎண்ட்ரீ என இவை அனைத்தையும் தாண்டி முதன் முறையாக 3 விஜய் நடிக்க, தளபதி தெறியை தொடர்ந்து மெர்சலில் மிரட்டியுள்ளார்.

mersal

அட்லீ-விஜய்யின் இரண்டாவது கூட்டணியில் தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல். படத்தின் ரிலீசுக்கு பிறகு நிறைய பிரச்சனைகளை சந்தித்தாலும் படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற தவறவில்லை.

இந்த வருடத்தில் பிரமாண்ட வெற்றியை பெற்ற படம் மெர்சல். சர்ச்சைகள் எல்லாம் இப்படத்துக்கு ப்ரோமோஷனாக அமைந்தது.

mersal-box

இப்படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி சமீபத்தில் ஒரு பேட்டியளித்துள்ளார். இதில் நீங்கள் யாராக மாற விரும்புவீர்கள் என்ற கேள்விக்கு, மெர்சல் படத்தை போல் இரண்டு கதாபாத்திரமாக மாறுவேன்.

வால்ட் டிஸ்னியாக மாறி தமிழ்நாட்டில் டிஸ்னிலேண்ட் ஓபன் செய்ய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவேன் என்றும் இரண்டாவதாக விஜய்யாக மாறி மெர்சல் 2 படத்தில் நடிக்க தேனாண்டாள் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவேன் என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top