மலையாள சினிமாவை புரட்டி போட்ட மீ டூ புகார்கள்.. விசாரணை வளையத்திற்குள் சிக்கிய ராதிகா சரத்குமார்

Mollywood Me Too: மலையாள சினிமா உலகத்தின் தற்போது சுனாமி அலையே தோற்றுவிடும் அளவுக்கு மீ டூ அலை அடித்துக் கொண்டிருக்கிறது. 2018 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஹேமா கமிட்டியின் அறிக்கை கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியானது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலரின் முகத்திரையை கிழித்தெரிந்திருக்கிறது இந்த ஹேமா கமிட்டி அறிக்கை. நமக்கு நன்றாக பரீட்சையமான நடிகர்கள் முகேஷ் மற்றும் ஜெயசூர்யா போன்றவர்கள் கூட இதில் சிக்கி இருக்கிறார்கள்.

அறிக்கை வெளியானதும் விசாரணை தொடங்குவதற்கு முன்னமே மலையாள நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த பலரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டார்கள். பிரச்சனை பெருசாகி சில நாட்கள் கடந்த பின் மலையாள சூப்பர் ஸ்டார்கள் ஆன மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் சட்டம் தன் கடமையை செய்யும் என அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.

நடிகர்கள் எங்கு போனாலும் இது குறித்த கேள்வி தான் தற்போது அவர்களிடம் கேட்கப்படுகிறது. பலரும் பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் இல் இருந்து நடிகர் ஜீவா வரை நேற்று மீடியாவிடம் சிக்கிக் கொண்டு படாத பாடுபட்டார்கள்.

விசாரணை வளையத்திற்குள் சிக்கிய ராதிகா சரத்குமார்

போதாத குறைக்கு மெட்டி ஒலி சீரியலில் மாமியார் கேரக்டரில் நடித்து பிரபலமான நடிகை சாந்தி வில்லியம்ஸ் மோகன்லாலுக்கு எதிராக சில கருத்துக்களை எடுத்து வைத்திருக்கிறார். மேலும் நடிகை ராதிகா சரத்குமார் இது பற்றி பேசியது தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ராதிகா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் அவருக்கு நடந்த கசப்பான அனுபவம் பற்றி பேசியிருந்தார். தான் ஒரு மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த கேரவனில் கேமராக்கள் ரகசியமாக பொருத்தப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

நடிகர்கள் சிலர் தங்களுடைய ஃபோன்களில் இந்த வீடியோவை பார்த்து சிரித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.ராதிகா படப்பிடிப்பு தளத்தில் ஒருவரிடம் விசாரித்த போது இந்த கேமரா ஒளித்து வைக்கப்பட்டிருந்ததை பற்றி சொல்லி இருக்கிறார்கள்.

இது தெரிந்த உடனேயே ராதிகா பக்கத்தில் ஹோட்டலில் அரை எடுத்து தங்கி அங்கேயே துணி மாற்றிக் கொண்டு அந்த படத்தில் நடித்ததாக பேசி இருந்தார். மேலும் சில நடிகைகளுக்கு போன் செய்து இது பற்றி எச்சரித்ததாகவும் சொல்லியிருந்தார்.

இந்த வீடியோ வைரலானதும் ராதிகாவே விசாரிக்க இருப்பதாக நேற்று ஹேமா கமிட்டி சார்ந்தவர்கள் சொல்லி இருந்தார்கள். இந்த நிலையில் இன்று இந்த சம்பவம் குறித்து ராதிகாவிடம் போனில் விசாரித்து இருக்கிறார்கள்.

ராதிகா இந்த சம்பவத்தின் போது நடந்த உண்மையை சொன்னால் கண்டிப்பாக கேரவனுக்குள் கேமரா பொருத்தி நடிகைகள் ஆடை மாற்றுவதை பார்த்தது யார் என்ற பெயர்கள் வெளிவர வாய்ப்பு இருக்கிறது.

மலையாள சினிமாவை கிடுகிடுக்கும் மீ டு பிரச்சனை

Next Story

- Advertisement -