பொழுதுபோக்கு பூங்காவில் இருந்த பெரிய ஊஞ்சலில் ஆடும் போது தவறி தலை கீழாக தொங்கிய பெண் பத்திரமாக காப்பற்றப்பட்டுள்ளார்.

பொழுது போக்கு பூங்கா பலவிதமான அனுபவங்களை தரக்கூடியவை. பெரும்பாலும் மகிழ்ச்சியான அனுபவங்களை தரும் என்றாலும், சில நேரங்களில் வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்களை தருபவை. சமீபத்தில் பாரிஸில் பெண் ஒருவர் பெரும் விபத்தில் இருந்து மீண்டுள்ளார். பெண் ஒருவர் உடன் ஒருவருடன் “தி அட்ரெனாலைன்” எனும் ராட்சத ஊஞ்சலில் அமர்ந்திருந்தார். ரைட் தொடங்கிய சில நிமிடங்களில் எதிர்பாராத விதமாக அப்பெண் தவறி தலை விழுந்து தலை கீழாக தொங்கினார்.

அப்படி தொங்கி கொண்டு இருக்கும் போது அவரை கீழே நிற்பவர்கள் பிடித்து காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் ஊஞ்சல் வேகமாக ஆடியதால் நிறுத்த முடியவில்லை. அதுவும் இல்லாமல் கீழே இருந்த இரும்பில் இடித்து கொள்ளாமல் சிறு இழையில் உயிர் தப்பித்தார். ஊஞ்சலின் வேகம் குறைந்தவுடன் கீழே நின்ற ஆண்கள் தொங்கிக்கொண்டிருந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் தற்காலிகமாக ரைட் மூடப்பட்டுள்ளது.