Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தன்னை ஒரு தலையாக காதலிக்கும் நடிகருக்கு லேடி சூப்பர்ஸ்டார் செய்த உதவி

கோலமாவு கோகிலா படத்தில் நடித்துள்ள யோகி பாபுவிற்காக யாருக்கும் செய்யாத உதவியை நயன்தாரா செய்து இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வெற்றி கண்டவர் நயன்தாரா. இதனால், அவரை ரசிகர்கள் லேடி சூப்பர்ஸ்டார் என புகழ்ந்து வருகிறார்கள். எத்தனை கஷ்டங்கள், சர்ச்சைகள் வந்தபோதும் அதனை தகர்த்தெறிந்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென தனியிடத்தை உருவாக்கியவர். தற்போது இவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் படங்கள் பெரும்பாலும் பெண்களை முன்னிலைப் படுத்துவதாகவே அமைந்து வருகிறது. நெல்சன் இயக்கத்தில் கோலமாவு கோகிலா படத்தில் நடித்து வரும் நயன், சர்ஜூன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இதில், கோலமாவு கோகிலா படத்தில் நயன் தாராவிற்கு ஜோடி கிடையாது. ஆனால், காமெடி நடிகர் யோகி பாபு, அவரை ஒரு தலையாக காதலிக்கு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், நயனை உருகி சைட் அடிக்கும் கல்யாண வயசு பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்பாடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதி இருந்தார். சமூக வலைத்தளத்தில் இப்பாடலுக்கு சக்கை போடு வரவேற்பு கிடைத்தது.

இதனால், யோகி பாபுவிற்கு கோலிவுட்டில் பெரிய வரவேற்பு உருவாகி இருக்கிறது. இந்நிலையில், சர்ஜூன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் யோகி பாபுவிற்கு ஒரு வலுவான கதாபாத்திரத்தை நயன் சிபாரிசு செய்து வாங்கி தந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. பெரும்பாலும்,இந்த வேலைகளை எல்லாம் நயன் செய்ய மாட்டார். அவர் உண்டு, வேலை உண்டு என்று மட்டுமே இருப்பார். அவரே இப்படி சிபாரிசு செய்து வாங்கி தந்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top