ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கி என்று எல்லாவற்றிலும் ஸ்மார்ட் வந்துவிட்டதை தொடர்ந்து ஹெல்மெட்திலும் ஸ்மார்ட் ஹெல்மெட் வரவுள்ளது.

ஜப்பானை சேர்ந்த பார்டர்லெஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட் ஹெல்மெட் மாடலை CrossHelmet என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ஒரு லட்சத்து பதினைந்தாயிரம் ரூபாய்.

இவ்வளவு விலையுள்ள இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்று பாப்போம்.

வண்டிக்கு பின்னால் வருபவர்களை பார்பதற்கான rear view காமிரா

360 டிகிரி முழுவதும் கண்காணிக்க கூடிய பிரத்யேக காமிரா

மொபைல் ஆப் உடன் தகவலை பகிரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தொழில் நுட்பம்.

நேவிகேஷன், நேரம், சென்றடையவிருக்கும் இடத்திற்கான தொலைவு போன்றவற்றை துல்லியமாக கணிக்கும் தொழில்நுட்பம்.

அனைத்து தகவல்களையும் நம் மொபைல் போன் ஆப் மட்டுமல்லாது ஹெல்மெட்டில் உள்ள ஒரு பிரத்யேக திரையில் பார்த்துக்கொள்ளும் அம்சம்.

வெளிப்புற டிராபிக் சத்தத்தை கேட்காமல் கண்ட்ரோல் செய்யும் வசதி

இத்தனை சிறப்பம்சங்கள் உள்ளதால்தான் இதன்விலை இவ்வளவாம்!

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அதென்ன ட்ராபிக் சத்தம் கேட்காமல் கண்ட்ரோல் செய்யும் வசதி? அப்புறம் எப்படி பின்னாடி வர்றவன் ஹாரன் அடிக்குறது கேட்கும்?