விக்ரம் குமார் தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் மோஸ்ட் வான்டேட் இயக்குனர்.

இவர் இயக்கத்தில் வரும் டிசம்பரில் ரிலீஸ் ஆகப்போவது தெலுங்கு படம் “ஹலோ”. நாகர்ஜூனாவின் இளைய மகன் அகில் இதில் கதாநாயகனாகவும், கல்யாணி பிரியதர்சன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். ரொமான்டிக் ஆக்ஷன் படமாக தயாராகியுள்ள இப்படத்தின் டீஸர் வெளியான ஒரு வாரத்தில் நல்ல ரீச் ஆகியுள்ளது.

இயக்குனருக்கு தமிழ் நாட்டில் நல்ல மார்க்கெட் உள்ளது. எனவே இப்படம் தமிழில் டப்பிங் செய்யப்படும் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது. அதிகார பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.