திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

பாண்டியனை விட்டு தனியாக பிரிந்து போகணும்னு ஆசைப்படும் வாரிசு.. சுயநலவாதியாக இருக்கும் தங்கமயில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மீனாவுக்கு ஏதாவது கிப்ட் வாங்கி கொடுக்கணும் என்று ஆசைப்பட்ட செந்தில் கடையிலிருந்து 500 ரூபாய் பணத்தை எடுத்துட்டு ஹேண்ட் பேக் வாங்க போய்விட்டார். அந்த கடையில் எல்லாமே ரேட் அதிகமாக இருந்ததால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது கடையில் வேலை பார்ப்பவரிடம் கம்மியான விலையில் ஹேண்ட் பேக் கிடைக்குமா என்று கேட்கிறார். உடனே ஒரு ஹேண்ட் பேக் 850 ரூபாய் என்று செந்திலிடம் காட்டுகிறார். ஆனால் செந்தில் இடம் 500 ரூபாய் தான் இருக்கிறது என்பதால் உடனே பழனிச்சாமிக்கு போன் பண்ணி 350 ரூபாய் பணம் வேண்டும் என்று கெஞ்சுகிறார். பழனிசாமி அக்கவுண்டில் போட்டு விடுகிறேன் என்று சொன்ன பிறகு அந்த ஹேண்ட் பேக்கை செந்தில் வாங்கி விடுகிறார்.

அடுத்ததாக பாண்டியன் வீட்டில் சிசிடிவி கேமராவை வைத்ததால் அதன் மூலம் பாண்டியன் கோமதி பழனிசாமி என மூன்று பேரும் சேர்ந்து வாசலில் வருபவர்களை வேடிக்கை பார்த்து இருக்கிறார்கள். அப்பொழுது சரவணன் பைக்கு விட்டு இறங்கி தங்க மயிலுக்கு கேக் வாங்கிட்டு வருகிறார். செந்தில் மற்றும் மீனாவும் ரொமான்ஸ் பண்ணிக் கொண்டு வருவதை பார்க்கிறார்கள்.

இதனை அடுத்து எல்லோரும் வீட்டிற்கு வந்த நிலையில் தங்கமயிலுக்கு கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள். ஆனால் பொய்யான பிறந்தநாளுக்கு இவ்வளவு தூரம் பண்ணுகிறார்கள் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் தங்கமயிலும் உண்மையை சொல்லாமல் தனக்கு பிறந்தநாள் என்பது போல் நடித்துக் கொண்டு சுயநலமாக மற்றவர்களை ஏமாற்றி வருகிறார். இவருடைய விஷயம் வெளியே வரும் பொழுது தங்கமயில் உண்மையான சுயரூபம் எல்லோருக்கும் தெரியும்.

அடுத்ததாக செந்தில், மீனாவிற்காக ஆசை ஆசையாக வாங்கிட்டு வந்த ஹேண்ட் பேக்கை கொடுக்கிறார். மீனாவும் சந்தோஷப்பட்டு வாங்கி கொள்கிறார். ஆனால் செந்தில் பேசும் பொழுது இந்த வீட்டை விட்டு தனியாக போனால் நன்றாக இருக்கும். சந்தோசமாக வாழலாம் என்ற நினைப்புடன் தான் மீனாவிடம் பேசிக் கொள்கிறார். ஆனால் மீனாவிற்கு அந்த மாதிரி கொஞ்சம் கூட ஆசையை இல்லை.

இன்னும் செந்தில் கடை பணத்தை திருடி இருக்கிறார் என்ற விஷயம் பாண்டியனுக்கு தெரிந்துவிட்டால் அதற்கு ஒரு பிரச்சினை வரும். திருடிய பணத்தில் தான் ஹேண்ட் பேக் வாங்கி கொடுத்து இருக்கிறார் என்று விஷயம் மீனாவுக்கு தெரிந்தாலும் பிரச்சினை வரும். ஆக மொத்தத்தில் கூட்டு குடும்பமாகவே இருந்தால் சின்ன சின்ன பிரச்சனைகள் வரத்தான் செய்யும். ஆனால் அதையெல்லாம் சமாளித்து போனால்தான் உறவுகளின் முக்கியத்துவம் தெரியும் என்பதற்கு ஏற்ப கதை நகர்ந்து வருகிறது.

Trending News