கோபி பக்கம் சாய்ந்த பாக்யாவின் வாரிசுகள்.. அம்மாவை மதிக்காமல் பதிலடி கொடுத்த செழியன்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், குடிப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும் என்ற நினைப்பில் செழியன் தற்போது ஆபீஸ் பிரச்சனையை நினைத்து குடிக்க ஆரம்பித்து விடுகிறார். இதனை பார்த்த கோபி, செழியனுக்கு ஆறுதல் சொல்லி அரவணைப்புடன் பேசி வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார். இதை பார்த்த பாக்யா, செழியன் இடம் என்ன ஆச்சு ஏன் குடிச்சிட்டு வந்திருக்கிறார் என்று கேட்கிறார்.

அதற்குச் செழியன் எல்லா விஷயத்தையும் உங்களிடம் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. என் பிரச்சனை எனக்கு மட்டும்தான் தெரியும் என்று பாக்கியவை மதிக்காமல் பேசிவிட்டு மாடிக்கு போய் விடுகிறார். அங்கே ஜெனி, செழியனை பார்த்ததும் குடித்து விட்டு வந்திருக்கிறாயா என்று கேட்கிறார். அதற்கு ஆமாம் என்று சொல்லி நிலையில் பாக்யாவை பற்றி பேசி எதற்கெடுத்தாலும் கேள்வி மேல் கேள்வி கேட்டு தொந்தரவு பண்ணுகிறார்கள் என்பது போல் ஜெனியிடம் சொல்கிறார்.

பாக்யாவை கொஞ்சம் கொஞ்சமாக துன்புறுத்தும் கோபி

அதற்கு ஜெனி, உனக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கிறது என்பது அத்தைக்கு தெரியுமா? அப்படி இருக்கும் பொழுது அவங்க எதார்த்தமாக உன் மேல் இருக்கும் அக்கரையில் தான் கேள்வி கேட்டார்கள். அதற்கு ஏன் இவ்வளவு கோவப்பட்டு பேசுகிறாய் என்று சொல்கிறார். ஆனாலும் செழியன் பேசுவது கொஞ்சம் கூட சரியில்லை என்பதற்கு ஏற்ப பாக்கியா மீது கோபப்படுகிறார்.

இப்படியே போனால் செழியன் மறுபடியும் ஏதாவது ஏழரை இழுத்து வந்து பாக்கியாவிற்கு பிரச்சனை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. செழியன் தான் எப்படி இருக்கிறார் என்றால் இனியாவும் திருந்தவே மாட்டார் என்பதற்கு ஏற்ப மறுபடியும் பாக்யாவிற்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்து விட்டார். அதாவது காலேஜில் நடக்கும் டான்ஸ் போட்டியில் கலந்து கொண்டு முதல் ஆளாக தேர்வாகியிருக்கிறார்.

இதனால் நடக்க போகும் ரியாலிட்டி ஷோவில் இரண்டு மாதம் கலந்து கொள்ள வேண்டும் என்று இனியாவிற்கு காலேஜிலிருந்து தேர்வு செய்து இருக்கிறார்கள். ஆனால் இதற்கு பாக்யா பெர்மிஷன் கொடுக்கவில்லை. உடனே இனியா, கோபியை சந்தித்து விஷயத்தை சொல்லி அம்மா எனக்கு பெர்மிஷன் கொடுக்கவில்லை என்பதை சொல்கிறார்.

உடனே கோபி, பாக்கியா மீது இருக்கும் கோபத்தினால் இனியாவிற்கு ஆதரவாக பேசி நீ போட்டியில் கலந்து கொள் என்னுடைய முழு ஆதரவும் உனக்கு தான் என்று சொல்லிவிடுகிறார். இந்த சந்தோஷத்தில் வீட்டுக்கு திரும்பிய இனியாவிடம், ஈஸ்வரி பாட்டி உன் அப்பாவை பார்க்காமல் உன்னால் இருக்க முடியாதா. ஏன் அங்கே போனாய் என்று கேட்கிறார்.

அதற்கு இனியா என் அப்பாவை பார்க்க நான் அப்படித்தான் போவேன். உங்களுக்கு வேண்டுமென்றால் நான் பேசணும் உங்களுக்கு வேண்டாம் என்றால் நான் பேசக்கூடாதா? என்னால அப்பாவ பார்க்காமல் பேசாமல் இருக்க முடியாது என்று ஈஸ்வரி மற்றும் பாக்யாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எதிர்த்து பேசி அப்பா பக்கம் சாய்ந்து விட்டார்.

அந்த வகையில் கோபி இதை தான் எதிர்பார்க்கிறேன் என்பதற்கு ஏற்ப ஒவ்வொருவரையாக கவுத்து கொண்டு வருகிறார். இதனால் பாக்கியாவிற்கு ஹோட்டலில் மட்டும் இல்லாமல் குடும்பத்திலும் ஏகப்பட்ட பிரச்சினையை சந்திக்கப் போகிறார். அப்பொழுது தான் தனிமையின் வருத்தமும் குடும்பத்திற்காக வாழ்க்கையை தொலைத்து விட்டோமோ என்ற நினைப்பும் வரப்போகிறது. ஆனால் அதற்குள் ஈஸ்வரி இந்த பிரச்சனையில் மாட்டிக் கொண்டு முழிக்க போகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News