Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
அந்த நடிகர் தான் என்னை காதலித்து ஏமாற்றினார்.. புலம்பும் உயரமான நடிகை
அக்கட தேசத்தில் அறிமுகமாகி இருந்தாலும் நம்ம மொழியில் ஒரு கலக்கு கலக்கியவர் தான் அந்த உயரமான நடிகை. அம்மணியின் கவர்ச்சியை பற்றி அக்கட தேசத்தில் கேட்டால் ஜொள்ளு விடுகிறார்கள்.
தமிழிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நம்பர்-1 நடிகையாக வலம் வந்தார். பாவம் ஒரே ஒரு குப்பை படத்துக்காக உடல் எடையை கூட்டி தற்போது ஆன்ட்டி போல மாறி விட்டார் அந்த நாயகி.
இருந்தாலும் நடிகையின் திறமையான நடிப்பில் இன்னும் குறையில்லை. என்ன ஒன்னு, நடிகையும் ஹீரோவையும் பக்கத்தில் வைத்துப் பார்த்தால் நடிகை மட்டுமே கேமரா மொத்தத்தையும் அடைத்துக் கொள்கிறாராம்.
போதாக்குறைக்கு நம்ம பத்திரிக்கை நண்பர்கள் அம்மணிக்கு எப்போது திருமணம் என்று கேட்டு கேட்டு, என்னடா இது வாழ்க்கை என நடிகையை புலம்ப வைத்துள்ளார்களாம். வேறு வழியே இல்லாமல் தன்னுடைய காதலைப் பற்றி வாயை திறந்து விட்டாராம் அந்த நாயகி.
சமீபத்தில் கூட நடிகை இரண்டாம் தாரமாக செல்லப் போவதாக பல வதந்திகள் கிளம்பியதால் வேறு வழியில்லாமல் தன்னுடைய பழைய காதலை பற்றி பேசினாராம். அவர் வேறு யாருமல்ல. அவரும் ஒரு உயரமான அக்கட தேசத்து நடிகர் தான்.
ஒரு காலத்தில் செல்லம் தங்கம் என இருவரும் கொஞ்சி கொள்ளாத நாட்களே இல்லையாம். ஆனால் தற்போது நேருக்கு நேர் பார்த்துக் கொண்டாலும் பேசிக் கொள்ளாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டதாம். நடிகருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் நடிகை சலித்து விட்டதாக செய்திகள் வெளியானது.
இருந்தாலும் நடிகரை பார்த்தால் அப்படி ஒன்னும் கெட்டவர் போல் தெரியவில்லை. அம்மணி தான் முன்னணி நடிகர்களுடன் ஒட்டி உரசியது நடிகருக்கு பிடிக்கவில்லை போல. அது தெரிஞ்சு தான் அம்மணி ஒரு கட்டத்திற்கு பிறகு நாயகிகளை மையப்படுத்தும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தாராம்.
இருந்தாலும் நாயகியின் மீது கொஞ்சம் சந்தேகத்தில் இருந்த அந்த நடிகர் ஆள விடு சாமி என கூறிவிட்டாராம். அதை தற்போது பத்திரிகைகளில் பேட்டியாக கொடுத்து கண்ணீர் வருகிறாராம் அந்த உயரமான நாயகி.
தற்போது மீண்டும் இருவரும் பேசிக்கொண்டு ஒன்றாக இருப்பதாக அரசல் புரசலாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
