Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
நண்பர்களிடமே வேலையை காட்டிய பிரபல நடிகர்.. பதவி ஆசையால் பறிபோன பழைய நட்புகள்
தமிழ் சினிமாவில் எதிரிகள் இருக்கலாம் ஆனால் தமிழ் சினிமாவுக்கு எதிரியாக இருப்பவர் தான் அந்த பிரபல நடிகர். நண்பர்கள் துணையால் பெரிய பெரிய பதவிகளை பிடித்த நடிகர் தற்போது அந்த நண்பர்களால் அனாதையாகி நிற்கிறாராம்.
தமிழ்சினிமாவில் சண்டை போடத் தெரிந்த நடிகர் என ஆரம்ப கட்டத்திலேயே பெயர் வாங்கியவர் அந்த நடிகர். பெரிய அளவு சொல்லிக்கொள்ளும்படி படங்கள் கொடுக்கவில்லை என்றாலும் அவ்வப்போது ஹிட் கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமாக வந்தார்.
அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் தன்னுடைய வயதுக்கார நடிகர்களை சேர்த்துக்கொண்டு ஒரு கூட்டத்தையே அமைத்தார். அதுவே பின்னாளில் அவருக்கு சினிமா உலகில் உள்ள பெரிய பெரிய பதவிகளை பெற்று தர உதவியது.
பதவி ஆசை யாரை விட்டது, ஒன்றுக்கு இரண்டு தேர்தல்களில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி, தலைவராகவும் பொறுப்பேற்றார். ஆனால் இவர் பொறுப்பேற்ற நேரமோ என்னமோ தமிழ்சினிமாவை தலைகீழாக மாறிப்போனது. அதுமட்டுமல்லாமல் முன்னாடி மாதிரி தற்போது நண்பர்கள் யாரும் இவருடன் கூட்டு சேர்வது இல்லையாம்.
பதவி கிடைக்கும் வரை நண்பர்களை உபயோகித்துக் கொண்ட அந்த நடிகர் அதன் பிறகு தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டாராம். ஏன் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலை பயன்படுத்தி அரசியலிலும் நுழைந்து விடலாம் எனவும் ஆசைப்பட்டிருக்கிறார்.
இது பிடிக்காத நண்பர்கள் அந்த நடிகரை விட்டு விலகி விட்டார்களாம். தற்போது நண்பர்கள் இல்லாமல் ஒத்தையாக சுற்றி வரும் அந்த நடிகரை திருமணம் செய்து இருந்த பெண்ணும் கைவிட்டார். பத்தாவதுக்கு பிரபல இயக்குனருடன் போட்ட சண்டை மானம் மரியாதை மொத்தத்தையும் நாறடித்து விட்டது.
இதனால் தற்போது எங்கும் செல்ல முடியாமல், எதுவும் யாரிடமும் சொல்லவும் முடியாமல் பாவமாய் சுற்றி வருகிறாராம் அந்த பிரபல நடிகர்.
