Tamil Cinema News | சினிமா செய்திகள்
கிழக்கு கடற்கரை சாலைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு! அச்சத்தில் எம்எல்ஏக்கள்!?
சசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதால் இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை – புதுச்சேரிக்கு அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வருவதால் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லாரி, கார், இரு சக்கர வாகனங்கள் சோதனைக்குப் பிறகு திருப்பி அனுப்பப்படுகின்றன. தீா்ப்பு சசிகலாவுக்கு எதிராக வரும் பட்சத்தில், போலீசார் அதிரடியாக கிழக்கு கடற்கரை சாலையில் ரிச்சார்ட்டில் தங்க வைக்கப்பட்டள்ள எம்எல்ஏக்களை மீட்க உள்ளனா்.
இதில் ஏற்கனவே சசிகலாவால் குவிக்கப்பட்டுள்ள ரவுடிகள், போலீசார் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பொதுமக்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சில மணி நேரங்களில் ஆக்சன் காட்சிகள் நடக்க உள்ளது. அச்சத்தில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில்ம வசிக்கும் மக்கள் உள்ளனா்.
எம்எல்ஏக்கள் என்ன நடக்குமோ என்கிற உச்ச கட்ட பயத்தில் உள்ளனா்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
