Tamil Nadu | தமிழ் நாடு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை விவகாரம்.. திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் கடும் கருத்து மோதல்!
தற்போது தமிழகத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படும் ஏழு பேர்களின் விடுதலை பற்றி அரசியல் கட்சிகள் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
அதிலும் குறிப்பாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரை அரசியல் கட்சிகள் விடுதலை செய்வது ஏற்புடையது அல்ல என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது
அது மட்டுமில்லாமல் ஒரு நாட்டின் பிரதமரை கொலை செய்த கொலைகாரர்களை ஏன் விடுதலை செய்ய வேண்டும்? என்றும், அவர்கள் கொலையாளிகள் என அழைக்காமல் தமிழர்கள் என ஏன் அழைக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் கே.எஸ். அழகிரி
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சியான, திமுக அந்த ஏழு பேரை விடுதலை செய்வதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பது திமுக உடன் கடும் கருத்து மோதலை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் ஏழு பேர் விடுவித்தால் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டேன் என்று ராகுல் காந்தி ஒருமுறை சொல்லியிருக்கிறார். மேலும் அவர்களின் குடும்பம் 7 பேரை மன்னித்துவிட்டதாகவும், பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
ஆகவே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படுவது ஏழு பேரையும் மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக செயல்பட்டு வருகிறது.

tn-cinemapettai
இப்படியிருக்கையில் தேர்தல் வரும் நேரத்தில் 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் திமுக-காங்கிரஸ் இடையே நிலவும் கருத்து வேறுபாட்டால், இவர்களுடைய கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
