இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தனது மனைவியிடம் தான் ஏதுவும் தவறு செய்திருந்தால் தன்னை மன்னித்து விடு என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் மற்றும் அவரது மனைவி Geeta Basra பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் நடனநிகழ்ச்சி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தனர்.

அப்போது Siddharth மற்றும் Trupti என்ற ஜோடி தங்களது நடனத்தை ஆடியுள்ளனர். அந்த நடனத்தைக் கண்ட அங்கிருந்த பார்வையாளர்கள் சிலர் கண்ணீர் வடித்தனர்.

இதைக் கண்ட ஹர்பஜன்சிங் சட்டென்று எழுந்து வந்து, மேடையில் ஏறி தனது மனைவியான Geeta Basra-விடம் தான் ஏதுவும் தவறு செய்திருந்தால் தன்னை மன்னித்து விடு என்று கூறியுள்ளார்.

இதற்கு காரணம் அந்த ஜோடிகளின் நடனம் மிகவும் உணர்ச்சிவசப்படும் படி இருந்தது. ஒரு கட்டத்தில் Trupti நோயால் அவதிப்படும் படியும், அவரை Siddharth தினந்தோறும் பார்த்துக்கொள்ளும் படி இருந்தது. அதில் ஒரு உண்மையான அன்பு இருந்தது.

இதனாலேயே உணர்ச்சிவசப்பட்டு ஹர்பஜன் சிங் மேடையின் மீது ஏறி தனது மனைவிடம் மன்னிப்பு கோரியுள்ளார் என்று கூறப்படுகிறது.