fbpx
Connect with us

Cinemapettai

நம் உடலின் உள்ளுறுப்புகள் எதை கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா? அம்மாடியோ இவ்வளவு பிரச்சனையா

human-body

News | செய்திகள்

நம் உடலின் உள்ளுறுப்புகள் எதை கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா? அம்மாடியோ இவ்வளவு பிரச்சனையா

மனிதன் அன்றாடம் தனது வாழ்க்கையை வெற்றி தோல்வி நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறான். வாழ்க்கையை மட்டுமே கவனிக்கும் நாம் சில சமயங்களில் உடல் உறுப்புகளை கவனிக்கத் தவறிவிடுகிறோம். ஆம் நண்பர்களே, இதோ உங்களுக்கான ஒரு சிறிய பதிவு.

சிறுநீரகம்
அதிக நேரம் கண் விழித்தல், தூக்கமின்மை போன்ற செயல்களால் சிறுநீரகம் பாதிப்படைகிறது.

வயிறு
நாம் தற்போது வெயில் காலம் என்பதால் அதிகமாக குளிரூட்டப்பட்ட உணவுகளை அருந்தி வருகிறோம், ஆனால் குளிரூட்டப்பட்ட பொருட்களை உணவுகளை அருந்துவதால் நமது வயிற்றுப்பகுதியில் பாதிப்படையச் செய்கிறது.

நுரையீரல்
தற்போது பல இளைஞர்களும் புகைப்பிடித்தலுக்கு அடிமையாகி விட்டனர். ஆனால் அதன் விளைவைப் பற்றி சிறிதும் புரிந்து கொள்வதில்லை புகைப்பிடிப்பதால் நுரையீரலில் புகை படிந்து நுரையீரலை மிகவும் பாதிக்கிறது.

கல்லீரல்
புகைப்பிடித்தலை எந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அதே அளவிற்கு மது அருந்தும் பழக்கமும் பாதிப்பை ஏற்படுத்திகிறது. மது மற்றும் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை அருந்துவதால் கல்லீரல் பகுதி பாதிப்படைகிறது.

கண்
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிமையாய் இருப்பது டிவி பார்த்தல், ஸ்மார்ட்போன் ,உபயோகித்தல் கம்ப்யூட்டர் திரையை அதிகம் பார்த்தல் போன்றவற்றால் கண் பகுதி பாதிப்படைகிறது.

இந்த பாதிப்பை குறைக்க எந்த பொருட்களை உபயோகித்தாலும் கண்ணை சிறிது நேரம் கண் சிமிட்டி கண் சிமிட்டி பார்த்தாள் பாதிப்பு குறையும்.

குடல் ,பித்தப்பை
கடல்சார் உணவுகளை பாகுபாடு இன்றி மிகுதியாக உண்பதால் குடல் பகுதி பாதிப்படைகிறது. காலை உணவை தவிர்ப்பதால் பித்தப்பை பகுதி பாதிப்படைகிறது.

அதனால் அனைவரும் காலை உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் இல்லையென்றால் முன்பு சொன்னது போல் பித்தப்பை பாதிப்படையும். இந்த குறிப்புகள் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top