Tamil Cinema News | சினிமா செய்திகள்
போனி கபூர் மீது கொல காண்டிலுள்ள தல ரசிகர்கள்.. வலிமை இல்லாம இத்தனை படமா.?
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தல அஜித். தற்போது இவரது நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மெகா ஹிட்டாவது நாம் அறிந்ததே.
தற்போது போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடிப்பில் வலிமை என்னும் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.
மேலும் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பாலிவுட் திரையுலகின் தயாரிப்பாளருமான போனி கபூர் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் மூலம் தான் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தயாரிப்பாளர் போனி கபூர் அடுத்ததாக தமிழ் படங்களை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் உள்ள ஒரு படத்தையும் தயாரிக்க உள்ளார்.
இதைத்தொடர்ந்து இவர் மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிராத்தி பூவங்கோலி’ என்ற திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இவ்வாறு அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தை பற்றி எந்தவித அப்டேட்டையும் தராமல் அடுத்தடுத்த புது படங்களை பற்றி அப்டேட்களை கொடுத்து வருவதால் போனி கபூர் மீது அதிக கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் தல ரசிகர்கள்.

kapoor
மேலும் இதனைக் கேட்ட தல ரசிகர்கள் முதல்ல ‘வலிமை’ பட அப்டேட்களை வெளிவிடுங்கள் என கபூரை திட்டி தீர்க்கின்றனர்.
