ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் சத்யராஜ், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த மிகப் பிரம்மாண்டமான பாகுபலி2 படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

பாகுபலி2 படம் ரிலீசான ஒரே நாளில் ரூ.126 கோடி வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த படத்தை பார்ப்பதற்காக சில நிறுவனங்கள் விடுமுறை அளித்து ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

அப்படித்தான் ஹைதராபாத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்றில் பாகுபலி2 படத்தை பற்றி ஊழியர்கள் அனைவரும் அமர்ந்து சுவாரஸ்யமாக பேசி கொண்டிருந்தனர். அப்போது அந்நிறுவனத்தில் பணிபுரியும் மகேஷ்பாபு என்ற இளைஞர் படத்தின் காட்சிகளை தப்பு தப்பாக கூறியிருக்கிறார்.

இதை கேட்ட நிறுவனத்தின் உரிமையாளர் மகேஷ்பாபு படமே பார்க்கவில்லை என்பதை அறிந்தார். இதனால் கோபமடைந்த உரிமையாளர் படம் ரீலிசாகி 6 நாட்களாகியும், படம் பார்க்க விடுமுறை அளித்தும் படம் பார்க்காததால் மகேஷ்பாபுக்கு நிறுவன உரிமையாளர் மெமோ கொடுத்தார்.

மேலும் மகேஷ்பாபு அளித்த பதில் திருப்தியாகவில்லை எனக்கூறி பணியிலிருந்து நீக்கிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர் மகேஷ்பாபு இவர் பாஸா இல்ல லூஸா என புலம்பியபடியே சென்றிருக்கிறார்.