கோலிவுட்டின் வசூல் மன்னர்கள் என்றால் அஜித், விஜய் தான். இவர்கள் படங்கள் வந்தால் தமிழக திரையரங்குகளில் திருவிழா தான்.

ஆனால், இவர்கள் இருவருமே மிகவும் மதிக்கும் நடிகர் யார் தெரியுமா? தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் பவன் கல்யாண் தான்.

ஒரு முறை தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் அருண் பிரசாத் அஜித்திடம் ஒரு கதையை கூறியுள்ளார்.

அவர் முழுக்கதையையும் கேட்டு ‘சார் இது பவன் கல்யாண் செய்தால் நன்றாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து ஒரு முறை அருண் பிரசாத், பவனிடம் பேசும் போது, விஜய் அந்த இடத்தில் இருந்துள்ளார்.

உடனே விஜய் ‘சார் ஸ்பீக்கரில் வைய்யுங்கள், அவர் குரலை நான் கேட்க வேண்டும்’ என்று கூறினாராம்.