Tamil Cinema News | சினிமா செய்திகள்
45 வருடத்திற்கு முன் ரஜினிக்கு முதல் முதலில் ரசிகர் மன்றம் திறந்தவர் இவர் தான்.. கொரானாவால் பாதிக்கப்பட்ட சோகம்
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அவர்களை கண்காணிப்பதற்காக ரசிகர் மன்றம் என்ற ஒன்று உருவாக்கப்பட்டது.
இது இப்போது அல்ல. சினிமா ஆரம்பித்த காலத்திலிருந்தே இந்த ரசிகர் மன்றங்கள் நடைமுறையில் இருந்து வந்துள்ளன. பிற்காலத்தில் எம்ஜிஆர் அரசியல் வருவதற்கு இது மிகவும் உதவியது.
ரசிகர் மன்றம் திறந்தால் பிற்காலத்தில் அரசியலுக்கு உதவும் என பல முன்னணி நடிகர்கள் தற்போது ரசிகர் மன்றங்களை நடத்தி வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த வகையில் அடுத்ததாக அரசியலுக்கு வர உள்ள செய்தியை அவரே அறிவித்ததுதான். இதற்காகத்தான் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் முதல் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்படிப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 45 வருடத்திற்கு முன் முதல் முதலில் ரசிகர் மன்றம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கியவர் மதுரை ஏ பி முத்துமணி என்பவர் தான்.

ap-muthumani
தற்போது அவர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போனில் தொடர்பு கொண்டு அவரிடம் நலம் விசாரித்ததன் மூலம் இந்த உண்மை வெளியில் வந்துள்ளது.
