ரஜினி, கமல் எல்லாம் எனக்கு பின்னாடி தான்.. 75 வயதில் ஹீரோவாக நடித்த ஒரே தமிழ் நடிகர்

தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை காட்டிலும் ஹீரோக்கள் பல வருடங்களாக கதாநாயகனாக நடிக்க முடிகிறது. அது எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்து தற்போது வரை தொடர்ந்து வருகிறது. எம்ஜிஆர் சிறிது காலத்திலேயே அரசியலுக்கு சென்றதால் மீண்டும் சினிமாவில் நடிக்கவில்லை.

ஆனால் சிவாஜி வயதான பிறகும் சினிமாவில் நடித்து வந்தார். ஆனால் ஹீரோ கதாபாத்திரத்தை தவிர்த்து விட்டு மற்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது ரஜினி மற்றும் கமல் இருவரும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகின்றனர். ரஜினிக்கு தற்போது 71 வயது எட்டியுள்ளது.

தற்போது ரஜினி தலைவர் 169 படத்தில் நடிக்கவுள்ளார். அதேபோல் உலகநாயகன் கமலஹாசன் தனது 67வது வயதிலும் அதே எனர்ஜியுடன் கதாநாயகனாக நடித்து வருகிறார். ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னதாக தன்னுடைய 75 ஆவது வயதில் ஹீரோவாக நடித்தவர் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி.

ஆரம்பத்தில் வில்லனாக நடித்து வந்த கவுண்டமணி அதன்பின்பு தன்னுடைய நகைச்சுவையால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அப்போதைய காலகட்டத்தில் ஹீரோவை விட முதலில் கவுண்டமணி, செந்திலின் கால்சூட்டை தான் முதலில் வாங்குவார்கள்.

அந்த அளவுக்கு இவர்கள் பிஸியாக இருந்தனர். அதன் பின்பு சிறிது காலம் கவுண்டமணி படங்களில் நடிக்காமல் ஓய்வெடுத்து இருந்தார். சமீபத்தில் கவுண்டமணி தனது 83 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். கவுண்டமணி தனது 75 வயதில் 49 ஓ, வாய்மை மற்றும் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தொடக்கத்தில் இருந்தே ஹீரோவாக நடித்து வரும் நடிகர்கள் கூட இந்த வாய்ப்பு கிடைக்காத நிலையில் ஆரம்பத்தில் காமெடி நடிகராக நடித்து வந்த கவுண்டமணிக்கு 75 வயதுக்கு மேல் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. இந்நிலையில் மீண்டும் கவுண்டமணி சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்