பிரீ பிசினஸில் கலக்கும் தளபதின்னு சொல்றாங்க அது உண்மை இல்லை.. எதிர்பார்ப்பை எகிற வைத்தது இவர் மட்டும்தான்

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் தயாரிப்பு நிர்வாகம் ஒவ்வொரு நாளும் புது புது அப்டேட்டுகளை கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைத்துள்ளது. இதனாலேயே இப்படம் தற்போது அனைவரின் கவனத்தையும் பெருமளவில் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தின் பிரீ பிசினஸ் எதிர்பார்க்காத அளவுக்கு அமோகமாக நடைபெற்றுள்ளதாம். அந்த வகையில் இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் 16 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றி இருக்கிறது. இந்த ஆடியோ உரிமையை பொறுத்தவரையில் இதுவரை எந்த நடிகரின் படமும் இந்த அளவுக்கு வியாபாரம் ஆனது கிடையாது.

Also read: சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்டா மட்டும் போதாது.. ரஜினி எடுத்த துணிச்சலான முடிவு, தயக்கம் காட்டிய விஜய்

இதுவே பலரையும் ஆச்சரியப்படுத்திய நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையையும் முன்னணி நிறுவனங்களை கைப்பற்றி இருக்கிறது. அதாவது தொடர்ந்து விஜய் திரைப்படங்களை வாங்கி வரும் சன் நிறுவனம் தான் தளபதி 67 திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பல கோடி கொடுத்து தட்டி தூக்கி இருக்கிறது.

அதே போன்று டாப் ஹீரோக்களின் படங்களை வரிசையாக வாங்கித் தள்ளும் நெட் ப்ளிக்ஸ் நிறுவனம் தளபதி 67 திரைப்படத்தின் ஓ டி டி உரிமையை வாங்கி இருக்கிறது. மேலும் இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை இரண்டும் சேர்த்து கிட்டத்தட்ட 160 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகி இருக்கிறதாம். இப்படி நம்பர் 1ல் இருக்கும் நிறுவனங்கள் அனைத்தும் உரிமையை கைப்பற்றி இருப்பதால் விஜய் எதிர்பார்ப்பை எகிற விட்டுள்ளார் என்ற பேச்சு கிளம்பி இருக்கிறது.

Also read: தளபதி-67 பூஜையில் விஜய்யுடன் போஸ் கொடுத்த அந்த குழந்தை யார் தெரியுமா.? பிரபல காமெடியன் மகளாம்

ஆனால் உண்மையில் இத்தனை எதிர்பார்ப்புகளுக்கும் சொந்தக்காரர் என்று பார்த்தால் அது லோகேஷ் கனகராஜ் மட்டும் தான். விஜய் இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும் 70 சதவீதம் லோகேஷால் தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அந்த அளவுக்கு அவருக்கு இருக்கும் ரசிகர்களின் கூட்டம் விக்ரம் திரைப்படத்தால் அதிகமாகி இருக்கிறது.

அதிலும் லோகேஷ் யுனிவர்ஸ் என்ற ஒரு கான்செப்ட்டை வைத்துக் கொண்டு அவர் அழகாக காய் நகர்த்தி வருவது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். அது மட்டுமல்லாமல் அவருடைய பாசிட்டிவான பேச்சும், அணுகுமுறையும் அவரின் மேல் பல மடங்கு நம்பிக்கையை விதைத்துள்ளது. இதன் காரணமாகவே தற்போது தளபதி 67 உலக அளவில் எதிர்பார்க்கப்படும் ஒரு படமாக மாறி இருக்கிறது.

Also read: 24 ஆவது ஆண்டு அடி எடுத்து வைத்த சூப்பர் ஹிட் படம்.. விஜய் சினிமா கேரியரில் ஏற்பட்ட திருப்புமுனை

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்