பிக் பாஸ் போட்டியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒவ்வொரு வாரமும் மக்கள் வாக்களித்து பிக்பாஸ் வீட்டில் இருக்க வாய்ப்பு கொடுக்கலாம். மிகவும் பரபரப்புடன் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியை பெறப்போவது யார் என்ற ஆர்வம் பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று போட்டியாளர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 10 லட்சம் ருபாய் கொடுக்கப்படும், அதை எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்தும் பிக்பாஸ் வீட்டில் இருந்தும் வெளியேறிவிடவேண்டும் என கூறப்பட்டது. பிறகு 11 லட்சம் தந்து அந்த பணத்தை எடுத்துகொண்டு வெளியேறலாம் என கூறப்பட்டது. போட்டியாளர் அனைவரும் 100 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் இருக்கவே விரும்பினர்

பிக்பாஸ் வெற்றியாளருக்கு 50 லட்சம் பரிசு தொகையில் இந்த 10 லட்சம் கழிக்கப்படும் என்றும் தெரிவித்தார் பிக்பாஸ். ஆனால் இந்த 10 லட்சத்தை யாரும் எடுக்கவில்லை.

இதற்குமுன் பலூன் உடைக்கும் டாஸ்கில் கடுமையாக மோதிக்கொண்ட சினேகன்-ஹரிஷ் ஆகியோர் இடையே சண்டை வெடித்துள்ளது.

10 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு வெளியேறுவது பற்றி ஹரிஷ் விளையாட்டாக ஏதோ கூற, சினேகனுக்கு கோபம் வந்துவிட்டது. “இதெல்லாம் ஆரவ்விடம் வைத்துகொள்ளுங்கள், என்னிடம் வேண்டாம்” என கூறினார்.

ஆனால் சில நிமிடங்கள் கழித்து சிரித்துக்கொண்டே ‘சண்டை போடுவது போல நடித்தேன்” என கூறி ஹரிஷுக்கு ஷாக் கொடுத்தார் சினேகன்.

வெற்றியாளரை பற்றி சீனு ராமசாமி:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறப்போவது யார் என்பதனை பத்திரிக்கையில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி. நம்மை நாமே உணரவைத்த இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இது. இதில் பெண்களின் கவர்ச்சி உடை தான்பெண் சுதந்திரம் என்று சொன்னாலும் கட்டுப்பாடற்ற சுதந்திரம் ஆபத்து தான் என்பதை நாம் உணரவேண்டும். கலந்துகொண்டவர்களில் ஓவியா, வையாபுரி, சக்தி என மூன்று பேரையும் எனக்கு பிடிக்கும்.

ஓவியாவுக்கு சில நேரங்களில் சிநேகன் மிகுந்த ஆறுதலாகவும், கவனிப்பாகவும் இருந்திருக்கிறார் என்பதை மறக்க முடியாது. ஓவியா போன்ற பெண்ணை பார்ப்பது கடினம். இன்னும் சொல்லப்போனால் அவர் ஒரு கவித்துவமான காவியம். கடுமையான போட்டிக்கு நடுவில் சமூகத்தில் பெரும்பங்கு வகிக்கும் இவர்களில் யார் வெற்றி பெறப்போகிறார் என நானும் பொறுத்திருந்து பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் 2 நாட்களில் முடிவடைய இருக்கிறது. நிகழ்ச்சியின் பிரம்மாண்ட மேடையில் 15 பேருடன் போட்டியிட்டு இறுதியாக டைட்டிலை வெல்லப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.

கடந்த வாரம் கமல்ஹாசன் அடுத்த வார நடுவில் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார் என கூறியிருந்தார். அதன்படி புதிதாக வந்த புரொமோவில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறுகிறார், ஆனால் யார் அவர் என்பது மட்டும் தெரியவில்லை.

வீடியோவை பார்த்த ரசிகர்கள் பிந்து தான் வெளியேறுகிறார் என்று கூற, ஒருசிலர் ஹரிஷ் தான் வெளியேறுகிறார் என்றும் கூறுகின்றனர்.