அவர் ஒரு மெண்டல்.. சொந்த நாட்டிலேயே அசிங்கப்பட்ட நட்சத்திர கிரிக்கெட் வீரர்.

ஐபிஎல் போட்டிகளில், கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கேயும் சரியாக விளையாடவில்லை. அதுமட்டுமின்றி 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் ஐதராபாத் அணியில் விளையாடிய அவர், மீண்டும் கொல்கத்தா அணியில் கடந்த ஆண்டு இடம் பெற்று விளையாடினார்.

அங்கே அதிக போட்டிகள் வாய்ப்பு பெற்றாலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆல்-ரவுண்டராக இவருக்கு நிறைய போட்டிகளில் விளையாட கிடைத்தாலும் பந்துவீச்சிலும் தனது பங்களிப்பை சரியாக செய்யாமல் ஏமாற்றி விட்டார்.

பங்களாதேஷ் அணியில் விளையாடி வரும் நட்சத்திர வீரரான ஷாகிப் அல் ஹசன் தான் அந்த வீரர். இவர் கடந்த சில வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொள்கிறார்.

அவர் எந்த நேரத்தில் என்ன மாதிரி பேசுவார் என தெரியாது. திடீரென்று மிகவும் கோபப்பட்டு நடந்து கொள்வார். உள்ளூர் போட்டிகளில், நடுவர்களிடம் அடிக்கடி மோதிக்கொள்வார்கள். அடுத்து ஒரு, சில நேரங்களில் சமாதானமாகி, நன்றாகவும் பேசி பழகுவார்.

தற்போது பங்களாதேஷ், தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் கடைசி நேரத்தில் தனக்கு மன ரீதியாக சில பிரச்சனைகள் இருக்கிறது, அதனால் நான் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்துவிட்டார்.

இதற்கு முன்னர் கூட ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினாலும், அதை கொண்டாடாமல் பைத்தியக்காரர் போல் நடந்துகொண்டார் என பங்களாதேஷ் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் நஸ்முல் ஹசன், ஷாகிப் அல் ஹசனை பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சொந்த நாட்டிலேயே அவருடைய கேரக்டர் சரியில்லை என நிறைய எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்