Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜயின் பிறந்தநாள் ஹேஸ்டேக் செய்த மாபெரும் சாதனை.. கோலிவுட்டில் ஆச்சரியம்

விஜயின் பிறந்தநாளுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக ஹேஸ்டேக் இணையத்தளங்களில் 1 மில்லியனுக்கும் அதிகமான ட்வீட்களை பெற்று இருக்கிறது. தமிழ் சினிமாவில் 80களில் அதிக பிரபலமானவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவரின் மகன் விஜய். நடிப்பில் மீது ஆர்வம் இருந்தவருக்கு பெற்றோர்கள் முதலில் பெரிய நோ சொல்லினர். இருந்தும் ஒரே மகனின் பிடிவாதத்தால் தன் இயக்கத்திலேயே அவரை அறிமுகம் செய்து வைத்தார். முதலில் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து மகனுக்காக 7 படங்கள் வரை எடுத்தார். அதனால், அவரும் இளம் நடிகராக அறியப்பட்டார்.
ஆனால், இன்று தளபதியை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மாற்றி இருப்பது அவரின் தனிப்பட்ட உழைப்பு தான். வெற்றியிலும், தோல்வியிலும் ஒரே நிலையை கையாள்பவர். அவர் நடிக்கும் படங்கள் முதலில் ரசிகரை கவருமா என்பதையே கருத்தில் கொள்வார். அடிதடி சண்டை காட்சிகளை விட இளையதளபதியாக இருந்த போது அதிகம் காமெடி கதாபாத்திரங்களை கையில் எடுத்து வெற்றி பெற்றார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மெர்சல் படம் தான் அவருக்கு தளபதி அந்தஸ்து கொடுத்தது. ரசிகர்களும் அப்படியே ஏற்றுக்கொண்டனர். தமிழகத்தில் நடைபெற்று வரும் பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டவர்களை நடிகராக அல்லாமல் சக மனிதராக அவர் ஒவ்வொரு முறை பார்த்து ஆறுதல் சொல்லி வருவது மற்ற நாயர்களின் ரசிகர்களையே பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்நிலையில், இன்று இவரின் 44வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
என்ன தான் பிறந்தநாளை கோலாகமாக கொண்டாடக் கூடாது என ரசிகர் மன்றம் மூலம் விஜய் அறிவித்தாலும், அவர் ரசிகர்கள் இந்நாளை சிறப்பித்து தான் வருகிறார்கள். போஸ்டர், பேனர்கள் ஒட்டிய காலம் மருவி இன்று யார் சமூக வலைத்தளத்தை ஆக்கிரமிக்கிறார்கள் என்பது தான் ஹைலைட். அதை விஜய் ரசிகர்கள் இன்று சிறப்பாகவே செய்து வருகின்றனர்.
அதாவது, விஜய் பிறந்தநாளுக்கென உருவாக்கப்பட்ட #HBDThalapathyVIJAY என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டாப் கியரில் சென்று கொண்டு இருக்கிறது. இந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தி செய்யப்படும் ட்வீட் மற்றும் ரீட்வீட்களின் எண்ணிக்கை இந்த நிமிடம் வரை ஒரு மில்லியனுக்கும் அதிகமாக சென்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஒரு நடிகரின் பிறந்தநாள் வாழ்த்து ட்வீட் எண்ணிக்கையில் இது அதிகம் என்பதால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கிறார்கள்.
