ரெண்டு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானாலும் அருந்ததி என்னும் தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங் மூலம் நம் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட கொள்ளையழகு ஸ்வீட்டிக்கு இன்றுடன் வயது 36 ஆகிறது. ரெண்டு படத்திற்கு பிறகு அனுஷ்கா தமிழில் நடித்த படம் வேட்டைக்காரன். நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்தாலும் வரிசையாக தமிழில் அவர் நடித்த எல்லா படங்களும் ஹிட். தற்போது இறுதியாக வந்த பாகுபலி வரை.

anushka shetty birthday 2
anushka shetty birthday 2

தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது வெளிநாட்டு ரசிகர்களும் பாகுபலி படத்திற்கு பிறகு அனுஷ்காவை கண்டு ஜொள்ளு விட ஆரம்பித்துவிட்டனர். அந்த அளவிற்கு உலகம் முழுதும் ரசிகர்களை கொண்டவர் அனுஷ்கா. அனுஷ்காவை பற்றிய சில சுவாரஸ்யங்கள் அனுஷ்கா முறையாக யோகா கற்றவர். இவரது யோகா குரு பரத் தாகூர். அனுஷ்காவை அறிமுகம் செய்தவர் பூரி ஜகன்னாத் ஆனால் அந்த படம் வெற்றியடையவில்லை, ரவி தேஜாவுடன் அனுஷ்கா நடித்த விக்ரமர்குடு என்ற படமே இவரது முதல் வெற்றிப்படம்.

Anushka shetty

இதுவரை எந்த இந்திய நடிகையும் முயன்றிடாத உடல் எடையை கூட்டி நடிக்கும் முயற்சியை செய்து காட்டியவர். இஞ்சி இடுப்பழகி என்னும் படத்திற்காக இவர் 20 கிலோ எடையை கூட்டி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார். 2015ம் ஆண்டு ஹைதிராபாத் டைம்ஸ்ஸின் Most Desirable Woman என்னும் பட்டத்திற்காக அதிக அளவு வாக்குகள் பெற்று அப்பட்டத்தை வென்றவர். இயக்குனர் ராஜ மௌலி படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்த பெருமைக்குரியவர்.

anushka shetty birthday 4
anushka shetty latest

புவியியல் சார்ந்த விசயங்களில் அதிக ஆர்வமுள்ளவர். அதனை பற்றி கற்றுக்கொள்ள பல புத்தகங்களை படிக்கும் பழக்கமுள்ளவர். இயற்கை பற்றிய பல கட்டுரைகள், ஆய்வுகள், கவிதைகளை சேகரிக்கும் பழக்கமுள்ளவர். வேதம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான film fare விருது பெற்றவர். கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் என்று ஐந்து மொழிகளில் தடையின்றி பேசக்கூடியவர்.

anushka shetty birthday 1
anushka shetty birthday

அனுஷ்கா இதுவரை பெற்ற விருதுகள்: நந்தி சிறந்த ஜூரி விருது, சிறந்த நடிகைக்கான CineMAA விருது, ITFA சிறந்த நடிகை விருது, உகாதி விருது, விஜய் டிவி சிறந்த நடிகை விருது, ஹைதிராபாத் டைம்ஸ் சிறந்த நடிகை விருது, சிறந்த நடிகைக்கான அப்சரா விருது, சந்தோசம் சினி விருது, கலைமாமணி விருது. பாகுபலி இரண்டாம் பாகத்திற்காக ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்படுள்ளார் அனுஷ்கா.

2012ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த அனைவருக்கும் விருப்பமான 50 பெண்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதுவரை 32 தெலுங்கு படங்களிலும், 17 தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். சினிமா பேட்டை சார்பாக அழகு தேவதை அனுஷ்காவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். தேவதை என்பவள் கற்பனை செய்தால் இந்த தேனிதழ் கொண்டவள் ஒப்பனையில் வருவாள் !!!

anushka details
anushka details