Tamil Cinema News | சினிமா செய்திகள்
கணவரை திட்டமிட்டு பழி வாங்கிய ஐஸ்வர்யா ராய்…
ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவரை திட்டமிட்டு பழி வாங்கிய ஒரு சுவாரசிய நிகழ்வு குறித்த தகவல்கள் இணையத்தில் றெக்கை கட்டி பறந்து வருகிறது.
பாலிவுட்டின் ஸ்டார் ஐகானின் ஒரே மகன் அபிஷேக் பச்சன். 60 வயதை கடந்தும் இன்று வரை தன் நடிப்பால் சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் அமிதாப் பச்சனுக்கு, அபிஷேக் பச்சனால் ஈடுகொடுக்க முடியவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தாலும், அப்பாவை போல இவரால் பாலிவுட்டில் ஜொலிக்க முடியவில்லை. இதனால் இரண்டு வருடம் ப்ரேக் விட்டவர் தற்போது மீண்டும் பிஸியாக நடித்து வருகிறார். அபிஷேக் பச்சனும், நடிகை ஐஸ்வர்யா ராயும் திருமணம் செய்து கொண்டு 11 வருடத்தை தாண்டி வாழ்ந்து வருகிறார்கள்.
முதலில் சல்மான்கானுடன் தான் ஐஸ்வர்யா காதலில் இருந்தார். இந்த நிகழ்வு இந்திய செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் அதிகம் இடம்பெற்றது. பின்னர் இந்த இணை 2001ஆம் ஆண்டு பிரிந்தனர். இதில் ஐஸ்வர்யா ராய் அதிகமான மன உளைச்சலில் இருந்துள்ளார். இதை தொடர்ந்து தான் அவருக்கும் அபிஷேக் பச்சனுக்கும் நட்பு உருவாகி இருக்கிறது. இது பின்னர் காதலாக மாறிய போது, ஐஸ்வர்யா சற்று தயக்கம் அடைந்தாராம். காரணம் அபிஷேக் தன்னை விட இரண்டு வயது சிறியவர். ஆனால், ஐஸின் தந்தை சொன்ன அறிவுரையின் பேரில் காதலை திருமண பந்தத்தில் இணைத்தார்.
இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி தான் திருமணம் செய்து கொண்டு, புகழ், பணம் என எதுவுமே இருவருக்கு இடையிலும் இல்லை என அடிக்கடி தம்பதிகள் அடித்து சொல்லி விடுவர். அழகிய காதல் தம்பதிகளுக்கு தற்போது ஆராத்யா என்ற மகளும் இருக்கிறார். இதே வேளையில், ஐஸ்வர்யா ராயுக்கும், அவரின் மாமியார் ஜெயா பச்சன் மற்றும் நாத்தனார் இடையே தகராறு ஏற்பட்டு இருப்பதாக ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டன. அதுப்போல, அபிஷேக்கை ஐஸ் சந்தேகப்படுவதாகவும், விரைவில் இருவரும் விவகாரத்துக்கு செல்ல இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் யார் என்ன சொன்னாலும் நாங்கள் காதலர்கள் தான் என கண்டுக்கொள்ளாமலே இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஐஸ்வர்யா தனது கணவருக்கு ஒரு சூப்பர் உணவை சமைத்து கொடுத்து இருக்கிறார். ஆனால், அப்பாவி அபிஷேக் தான் இதில் சிக்கி விட்டார். ’இதில் என்ன பிரச்சனை உணவு தானே!’ அதானே உங்க மைண்ட் வாய்ஸ். சமீபத்தில் தனது ட்விட்டரில் தனக்கு ப்ரோகோலியே பிடிக்காது என அபிஷேக் தெரிவித்து இருந்தார். மனைவி ட்விட்டரில் இல்லை என்ற தைரியமோ என்னவோ. ஆனால் இதை ஐஸ்வர்யா எப்படி கண்டுப்பிடித்தார் என தெரியவில்லை. ப்ரோகோலி போட்ட சாலட்டை கணவருக்கு சமைத்து கொடுத்து விட்டார். பாவம் ஜூனியர் பி தான் ட்விட்டரில் மீண்டும் புலம்பி கொண்டு இருக்கிறார்.
