fbpx
Connect with us

Cinemapettai

ஹாட்ரிக் வாய்ப்பில் விஜய்சேதுபதி – ஜெயிப்பாரா ?

News | செய்திகள்

ஹாட்ரிக் வாய்ப்பில் விஜய்சேதுபதி – ஜெயிப்பாரா ?

vijaysethupathiவிஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரெளடிதான்’ மற்றும் ‘சேதுபதி’ ஆகிய இரண்டு படங்களுமே பத்திரிகைகளின் பாராட்டுக்களை பெற்றது மட்டுமின்றி வசூலிலும் சாதனை புரிந்துள்ளது. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக ஒப்பனிங் வசூல் செய்துள்ளதால் திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகிஸ்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் விஜய்சேதுபதியின் அடுத்த படமான ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படம் வரும் மார்ச் 11-ல் ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது. நலன்குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படமும் வெற்றி பெற்றால் மூன்று தொடர் வெற்றி படங்களை கொடுத்த ஹாட்ரிக் நாயகன் என்ற பெருமை விஜய்சேதுபதிக்கு சேரும்

விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சி.வி.குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இதுவரை 350 திரையரங்குகள் புக் ஆகியிருப்பதாகவும், இன்னும் தியேட்டர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top