ஜோகானஸ்பர்க்: பஞ்சாப் அணிக்காக சதம் அடித்த ஆம்லா, தென் ஆப்ரிக்காவின் ஓவர் நைட் ஹீரோவாக மாறியுள்ளார்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் இந்தூரில் நடந்த 22வது லீக் போட்டியில், மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின.

அதிகம் படித்தவை:  மோசமான சாதனையைக்கூட விட்டுவைக்காத ‘தல’ தோனி!

இதில் மும்பை அணி, பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இப்போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய தென் ஆப்ரிக்க வீரர் ஆம்லா, சதம் அடித்து அசத்தினார்.

அதிகம் படித்தவை:  ஐபில் டீம் மாறிய ஷிகர் தவான் - காரணம் இது தான். வைரலாகுது சன்ரைஸர்ஸ் வெளியிட்ட அறிக்கை.

இதன் மூலம் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு விரைவில், ஐபிஎல்,., ஸ்டைலில் அங்கு துவங்கும் உள்ளூர் டி-20 தொடரின் நட்சத்திர வீரர்களின் பட்டியலில் இவரது பெயரையும் சேர்த்துள்ளது. இதன்மூலம், இவருக்கு அத்தொடரில் அதிக சலுகை கிடைக்கும்.