Vishal : கேரளா சினிமாவில் இப்போது மீ டு பிரச்சனை தலை தூக்கி இருக்கிறது. அங்குள்ள பெரிய நடிகர்கள் முதல் இயக்குனர்கள் வரை நடிகைகளை அட்ஜஸ்மென்ட் டார்ச்சர் செய்தது குறித்து இப்போது பல விஷயங்கள் வெளியே வருகிறது. நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாக பேசி புகார் கொடுத்தார்கள்.
இதுகுறித்து நேற்றைய தினம் விஷால் பேசுகையில் யாராவது அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டால் செருப்பால் அடியுங்கள் என்று கூறியிருந்தார். அதோடு தமிழ் சினிமாவிலும் ஹேமா ஆணையம் போல ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என்று விஷால் பேசி இருந்தார்.
அதோடு பத்திரிக்கையாளர் ஸ்ரீ ரெட்டி உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்து இருந்தாரே என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு விஷால், ஸ்ரீ ரெட்டி யார் என்று எனக்கு தெரியாது, அவரது சேட்டைகள் மட்டும் எனக்கு நன்கு தெரியும் என்று கூறியிருந்தார்.
விஷாலின் பேச்சுக்கு பதில் கொடுத்துள்ளாரா ஸ்ரீ ரெட்டி
இதைத் தொடர்ந்து ஸ்ரீ ரெட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். மிஸ்டர் உமனைசர் மற்றும் வெள்ளை முடி உடைய வயதான அங்கிள் நீங்க பெண்களைப் பற்றி பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் நீங்கள் எவ்வளவு பெரிய பிராடு என்பது எல்லோருக்கும் தெரியும். உன்னுடன் இருந்த பெண்கள் ஏன் உன்னை விட்ட விலகிச் சென்றார்கள், உன்னுடைய நிச்சயதார்த்தம் ஏன் என்று போனது என பல கேள்விகளை ஸ்ரீரெட்டி அதில் கேட்டிருந்தார்.
மேலும் என் வீட்டில் நிறைய செருப்புகள் இருக்கு என்றும் குறிப்பிட்டிருந்தார். விஷால் அட்ஜஸ்மெண்ட் கேட்டால் செருப்பால் அடியுங்கள் என்று சொன்னதற்கு பதிலாக தான் ஸ்ரீ ரெட்டி இந்த பதிவு போட்டிருக்கிறாரா? என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மலையாள சினிமாவை கிடுகிடுக்கும் மீ டு பிரச்சனை
- ரியாஸ்கான் மீது மலையாள நடிகை கொடுத்த புகார்
- முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கும் விஷால்
- கோபத்தில் கொந்தளித்த பிக்பாஸ் நடிகை