Kamalhaasan-Harvard Universityகமலஹாசன் உலக தரத்தில் திரைப்படங்கள் அமைய வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களையும் தனது படங்களில் பயன்படுத்தி உள்ளார். நவீன தொழில் நுட்பங்களை படத்தில் புகுத்துவதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள கமலஹாசனுக்கு, அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகமும் மரியாதை அளிக்க உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பிரபலங்களை இந்த பல்கலைக்கழகத்தில் அழைத்து பேச வைக்கிறார்கள். கமலஹாசனுக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வருகிற பிப்ரவரி 6–ந் தேதி இந்த பல்கலைக் கழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க கமலஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பேசவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அதன்படி பிப்ரவரி 6–ந் தேதி ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் கமலஹாசன் உரையாற்றுகிறார்.

இந்த விழாவில், இந்தியா சார்பில் கமல் தவிர காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் உள்பட வேறு சிலரும் கலந்து கொள்கிறார்கள். இதன் மூலம் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றும் முதல் தென் இந்திய நடிகர் என்ற பெருமையை கமல் பெற்றுள்ளார்.