Connect with us

Cinemapettai

விஜய் ஷங்கருக்கு ஆதரவாக புள்ளி விவரத்துடன், ஸ்டேட்டஸ் தட்டிய வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே . அட லாஜிக் கரெக்ட் தானே ..

Sports | விளையாட்டு

விஜய் ஷங்கருக்கு ஆதரவாக புள்ளி விவரத்துடன், ஸ்டேட்டஸ் தட்டிய வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே . அட லாஜிக் கரெக்ட் தானே ..

விஜய் ஷங்கர் மற்றும் ரிசப் பண்ட் இருவரையும் ஒப்பிட்டு ஹர்ஷா போக்லே ட்விட்டரில் தட்டிய ஸ்டேட்டஸ் வைரலாகி வருகின்றது.

உலகக்கோப்பை டீம்மில் அம்பத்தி ராயுடு அவர்களை ஓரம்கட்டிவிட்டு தேர்வானத்தில் இருந்தே விஜய் ஷங்கர் இணையத்தில் விவாதப்பொருள் ஆகிவிட்டார். ஹர்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா பௌலிங் ஆல்ரவுண்டர்; விஜய் ஷங்கர், கேதார் ஜாதவ் பேட்டிங் ஆல் ரௌண்டார் என்பது தான் இந்திய டீம்மின் கணிப்பு.

எனினும் சமூகவலைத்தளங்களில் அடிக்கடி விஜய் ஷங்கர் அவர்களை ட்ரோல் செய்ய என ஒரு கூட்டமே உள்ளது. அப்கானிஸ்தான் போட்டியில் விஜய் ஷங்கருக்கு பதில் தினேஷ் கார்த்திக் சேர்த்திருக்கவேண்டும் என்றனர். கடந்த வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் பண்ட் சேர்த்திருக்கவேண்டும் என்றெல்லாம் நெட்டிசன்கள் பேசி வந்தனர்.

இந்நிலையில் ஹர்ஷா போக்லே தன் ட்விட்டரில் தட்டிய ஸ்டேட்டஸ் ” எதனால் விஜய் ஷங்கர் மீது இவ்வளவு வெறுப்பு மற்றும் பண்டை சுற்றி பில்ட் அப். ஷங்கர் இரண்டு முறை தான் பேட்டிங் செய்துள்ளார் (15 no , 29 ரன்கள்); மற்றும் கடின சூழலில் முக்கிய விக்கெட்டை வீழ்த்தினார்( பாகிஸ்தானின் இமாம் உல் ஹக்). மேலும் பண்ட் அவர்களை விட ஒரு நாள் போட்டிகளில் 11 ஆவரேஜ் அதிகம் ஷங்கருக்கு. அவரை கலாய்ப்பதை விட்டுவிட்டு அவருக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லுங்கள்.” என பதிவிட்டுள்ளார்.

எந்த போட்டியாகினும் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களில், 11 வீரர்கள் தானே ஆட முடியும். விடுங்க பாஸ், இட்ஸ் ஆல் இன் தி கேம் !

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top