இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை இழிவுபடுத்தும் விதமான செயல்களை புனே உரிமையாளரின் சகோதரர் ஹர்ஷ் கோயங்கா இன்னும் நிறுத்தவில்லை.

ஐ.பி.எல் பத்தாவது சீசன் நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் துவங்குவதற்கு முன்பாகவே புனே அணி சர்ச்சை பட்டியல் துவங்கியது. முதலில் தோனி கேப்டன் பதவியில் இருந்து நீக்கம்.

அதுமட்டுமல்லாமல் புனே உரிமையளரின் சகோதர் ஹர்ஷ் கோயங்கா  தோனியை இழிவுபடுத்தும் விதமான ட்வீட்களால் தோனி ரசிகர்கள் கொதித்துபோய் இருந்த நிலையில் ஹைதராபாத் அணியுடனான போட்டி மூலம் தோனி அனைத்து தன் மீதான விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ரசிகர்களுக்கும் சற்று ஆறுதல் அளித்தார்.

அதனை தொடர்ந்து வாய் திறக்காமல் இருந்த ஹர்ஷ் கோயாங்கா தற்போது மீண்டும் தனது கீழ்த்தரமான வேலையை தொடங்கி விட்டார்.

https://twitter.com/hvgoenka/status/859830830360928261

கொல்கத்தா அணியுடனான லீக் போட்டியில் வெற்றி பெற்ற புனே அணியை பாராட்டும் வகையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்வீட்டில் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு ஹீரோக்கள் புனே அணியில் உருவாகுகிறார்கள் என்று பதிவிட்டு அதில் ஸ்மித், தாஹிர், த்ரிப்பதி உள்ளிட்டவர்களின் பெயரை பதிவிட்டு அதில் ஹைதராபாத் அணியுடனான லீக் போட்டியில் வெற்றியை பெற்று கொடுத்த தோனியின் பெயரை சேர்க்காமல் விட்டுவிட்டார்.

தோனியின் சாதனையை மறந்த ஹர்ஷ் கோயங்காவை ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.