Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹாரிபாட்டர் படத்தில் நடித்த வெர்னே ட்ராயர் திடீர் மரணம்.!
ஹாலிவுட்டில் ஒரு படம் ஹிட் ஆனால் போதும் உலகம் முழுவதும் பிரபலமாகிவிடுவார்கள், ஏன் என்றால் ஹாலிவுட் படத்தை உலகம் முழுவதும் அனைத்து மக்களும் பார்ப்பார்கள், இந்த நிலையில் Harry Potter என்ற படத்தில் நடித்து மிகவும் பிரபலமாணவர் தான் Verne Troyer என்ற நடிகர்.

VerneTroyer
இவர் நேற்று மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் , இவரின் மரணம் ஹாலிவுட் உலகில் மிகவும் வருத்தத்தை கொடுத்துள்ளது, இவரின் மரணத்தை இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றில் செய்தியாளர்கள் உறுதிபடுத்தியுள்ளார்.
இவரின் வயது சுமார் 49 ஆகும் லாஸ் ஏஞ்சல் நகரில் உள்ள ஒரு மருத்துவமையில் சிகிச்சை பலனின்றி உயிர் இறந்துள்ளார். இவர் சுமார் 81 சென்டிமீட்டர் மட்டுமே உயரம் கொண்டவர், இவரின் நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார் இவரின் மரணசெய்தியை அவரது ரசிகர்கள் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
