fbpx
Connect with us

Cinemapettai

தேசியகீதம் முடியும் வரை காத்திருந்து, பின்னர் சிறுமியை தூக்கிய கேப்டன் ஹர்மான்ப்ரீத் கவுர். வைரல் வீடியோ உள்ளே.

Sports | விளையாட்டு

தேசியகீதம் முடியும் வரை காத்திருந்து, பின்னர் சிறுமியை தூக்கிய கேப்டன் ஹர்மான்ப்ரீத் கவுர். வைரல் வீடியோ உள்ளே.

மகளிர் டி 20 கோப்பை

பெண்களுக்கான டி 20 கோப்பை வெஸ்ட் இண்டீசில் நடை பெற்று வருகின்றது. இப்போட்டிகளில் பங்கேற்க கோச்சி ரமேஷ் பவர் மற்றும் ஹர்மான்ப்ரீத் கவுர் தலைமயில், 6 அறிமுக வீரர்களுடன் நம் இந்திய டீம் சென்றுள்ளது.

ஹர்மான்ப்ரீத் பஞ்சாபை சேர்ந்தவர். மத்திய வரிசையில் ஆடுபவர். ஷேவாக்கை ரோல் மாடலாக கொண்டவர். தனது பாட்டிங்க் திறனால் தனி ஆளாக ஆட்டத்தின் போக்கும் வல்லமை உடையவர். அர்ஜுனன் விருது பெற்றவர், ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பேஷ் லீக்கில் ஆடியவர்.

முதல் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக 51 பந்துகளில் 103 ரன்கள் குவித்து, டி 20 யில் சதம் அடித்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றவர்.

நாம் பார்க்கும் சம்பவம் பாகிஸ்தானுடனான போட்டிக்கு முன் நடந்தது. கயானாவில் போட்டி துவங்கும் முன் வழக்கம் போல தேசிய கீதம் பாடுவது இயல்பு. அதே போல் வீராங்கனைகள் தங்களுடன் மாஸ்க்காட் ஆக சிறுவர், சிறுமியரை அழைத்து வருவது தற்பொழுது விளையாட்டு உலகில் தினம்தோறும் நடக்கும் ஒன்று தான்.

https://www.instagram.com/p/Bp93mi0giPx/

இவருடன் வந்தவர் உடல் நலம் பாதிக்கப்பட, அப்படியே தேசிகீதம் இசைத்த சமயத்தில் அவரை தாங்கி பிடித்துள்ளார். பின் சகா வீரரின் உதவியுடன் அவரை தூக்கி சென்று ஆர்கனைசர்களிடம் ஒப்படைத்தார் கவுர்.

சில நாட்களாக இந்த வீடியோ நிறைய நபர்களின் பாராட்டை பெற்று வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top